Connect with us

india

இதெல்லாம் சராசரி இந்தியர்களை விட குறைவாம்… ஆனந்த அம்பானியின் திருமண செலவு எம்புட்டு தெரியுமா…?

Published

on

ஆனந்த் அம்பானி திருமணத்திற்கு செலவு செய்யப்பட்ட தொகையானது சராசரி இந்தியர்களை விட குறைவு என்று கூறப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் இன்று மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் கடைசி மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் மிக பிரம்மாண்டமாக நடைபெற்று வருகின்றது. இதில் உலக நாடுகளை சேர்ந்த பல பிரபலங்கள் அரசியல்வாதிகள், திரை பிரபலங்கள், நிறுவன முதலாளிகள், குத்துச்சண்டை வீரர் மைக் டைசன், முன்னாள் இங்கிலாந்து பிரதமர் மற்றும் பாடகி கிம் கதாசினி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

கடந்த 4 மாதங்களாக இவர்களின் திருமண கொண்டாட்டம் இந்தியர்களை வாய்ப்பிழக்க வைத்துள்ளது. 29 வயதான ஆனந்த் அம்பானி, பிரபல வைர வியாபாரியின் மகளான ராதிகா மெர்ச்சண்டை இன்று திருமணம் செய்து இருக்கின்றார். ஆரம்பம் முதலே ஆடம்பரமாக இவர்களின் திருமணம் நடைபெற்று வருகின்றது. இவர்களின் திருமண கொண்டாட்டம்தான் தற்போது இணையத்தில் படுவைரலாகி வருகின்றது.

பணம் இருப்பதால் அம்பானி கண்தெரியாமல் காசை செலவு செய்து வருகின்றார் என்று பலரும் கூறி வருகிறார்கள். அதன்படி தற்போது அம்பானி தனது மகன் திருமணத்திற்கு செய்துள்ள செலவு தொடர்பான தகவல் வெளியாகியிருக்கின்றது. இவர் ஏறக்குறைய 4,000 முதல் 5000 கோடி வரை தனது மகனின் திருமணத்திற்காக செலவிட்டிருக்கின்றார். முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு மட்டும் 7.65 லட்சம் கோடியாகும்.

இதில் தனது மகனின் திருமணத்திற்காக அவர் செலவு செய்த தொகை வெறும் 0.5 சதவீதம் மட்டும்தான். ஒவ்வொரு இந்தியர்களும் தங்களது திருமணத்திற்காக செலவு செய்வதை விட அம்பானி குறைவாகவே செலவு செய்திருக்கின்றார். இந்தியர்கள் குடும்பம் ஒன்று தங்களது சொத்து மதிப்பில் 10 முதல் 15 சதவீதம் வரை திருமணத்திற்கு செலவு செய்து வரும் நிலையில் அம்பானி தனது சொத்தில் 0.5 சதவீதம் மட்டுமே செலவு செய்திருக்கின்றார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *