india
ஆனந்த் அம்பானியின் டிரஸ்ல ஓட்டிட்டு இருக்க இந்த தம்மாதூண்டோட விலை எவ்வளவு தெரியுமா…? கேட்டா ஷாக் ஆயிடுவீங்க…
ஆனந்த் அம்பானியின் உடையில் ஒட்டிக் கொண்டிருக்கும் இந்த ஒரு சிறிய பொருளின் விலை கோடி ரூபாய் என்று கூறப்படுகின்றது.
முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த அம்பானிக்கு நேற்று தொடங்கி திருமணம் நடைபெற்று வருகின்றது. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாகவே திருமண கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடைபெற்று வருகின்றது. திருமணத்திற்கு முந்தைய வைபவங்களும் சிறப்பாக நடந்து முடிந்தது.
தற்போது பிகேசியில் உள்ள அம்பானி குடும்பத்துக்கு சொந்தமான ஜியோ ஓல்ட் டிரைவ் கன்வென்ஷன் அரங்கில் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்சன்ட் திருமணம் நடந்து வருகின்றது. இந்த விழாவிற்கு தமிழ் சினிமா பிரபலங்களான ரஜினிகாந்த், நயன்தாரா, ஏ ஆர் ரகுமான், சூர்யா, ஜோதிகா என பலரும் கலந்து கொண்டார்கள். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு சினிமா பிரபலங்கள், கன்னட சினிமா பிரபலங்கள், பாலிவுட் சினிமா பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.
பாலிவுட்டை சேர்ந்த பல பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் வித விதமான உடையில் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது. அது மட்டும் இல்லாமல் கிரிக்கெட் வீரர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்நிலையில் திருமணத்திற்கு முந்தைய விழாவில் அம்பானி மகன் ஆனந்த் அம்பானி ஒரு சிறிய அளவிலான பொருள் ஒன்றை தனது சட்டையில் அணிந்திருந்தார் ,
இது புரூஸ் என்று அழைக்கப்படும் 51 சபையர்கள், இரண்டு மரகதங்கள் மற்றும் ஒரு ஓனிக்ஸ் வைரம் ஆகியவற்றை கொண்ட 18 கேரட் தங்கத்தால் ஆனது. இதன் விலை ஒரு கோடி இருக்கும் எனக் கூறப்படுகின்றது. இதனை ஆனந்த் அம்பானியின் சகோதரர் ஆகாஷ் அம்பானி அவருக்கு பரிசளித்ததாக கூறப்படுகிறது.