Cricket
சானியா மிர்சாவோடு திருமணமா.. முதல்முறையாக மனம்திறந்த முகமது ஷமி
டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவோடு திருமணம் என்று வெளியான தகவல்கள் குறித்து கிரிக்கெட் வீரர் முகமது ஷமி முதல்முறையாக மனம்திறந்திருக்கிறார்.
உ.பியைச் சேர்ந்த முகமது ஷமி, ரஞ்சி உள்ளிட்ட உள்ளூர் தொடர்களில் மேற்குவங்க அணிக்காக விளையாடினார். ஷமிக்கும் அவரது மனைவி ஹசீன் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்கின்றனர். அதேபோல், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கை விவாகரத்து செய்துவிட்டார்.
இந்தநிலையில், முகமது ஷமி சானியா மிர்சாவைத் திருமணம் செய்ய இருப்பதாகத் தகவல்கள் சோசியல் மீடியாவில் வைரலாகப் பரவியது. இந்த விவகாரம் குறித்து சானியா மிர்சா தரப்பிலோ முகமது ஷமி தரப்பிலோ விளக்கம் எதுவும் கொடுக்கப்படாமல் இருந்தது.
இந்தநிலையில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்திருக்கும் பேட்டியில் முகாமது ஷமி, முதல்முறையாக மனம் திறந்திருக்கிறார். அவர் கூறுகையில், சானியா மிர்சாவுடன் திருமணம் என்கிற செய்தியை மறுத்ததோடு, அது வெறும் வதந்தி என்றும் புறந்தள்ளினார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், `இப்படியான தகவல்கள் பரவுவது விநோதமாக இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், போனைத் திறந்தால் என் போட்டோவுடன் மீம் வருவதை நானே பார்க்கிறேன். காமெடிக்காக மீம்களை உருவாக்குவதைப் புரிந்துகொள்கிறேன்.
அதேநேரம், அந்த மீம்கள் வேறொருவரின் வாழ்க்கை சம்மந்தப்பட்டது என்பதால், கொஞ்சம் கவனமாக செயல்பட வேண்டும். உங்கள் சொந்த வாழ்க்கையிலும் கொஞ்சம் கவனம் செலுத்தி வெற்றிபெற முயற்சி செய்யுங்கள். இப்படியான பொய்யான தகவல்களைப் பரப்புவதன்மூலம் என்ன சாதித்துவிடப் போகிறீர்கள்?’ என்று விளக்கமளித்திருக்கிறார் ஷமி.