job news
ஐ.டி.பி.ஐ வங்கியில் வேலைவாய்ப்பு.. 1000+ காலியிடங்கள்.. உடனே அப்ளை பண்ணுங்க..
வங்கி பணிக்காக காத்திருப்பவர்களுக்கென தற்போது IDBI வங்கியானது எக்ஸிகியூடிவ் பணிக்கான காலிபணியிடங்களுக்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதனை பற்றிய தெளிவான தகவல்களை காண்போம்.
முக்கியமான தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.06.2023
காலியிடங்கள்:
- பிற்படுத்தப்பட்டோர்- 255
- தாழ்த்தப்பட்டோர்- 160
- பழங்குடியினர்- 67
- பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டோர்- 103
- அன்ரிசர்வ்டு- 451
வயது வரம்பு:
இப்பணிக்கி விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 20 வயதினையும் அதிகபட்சமாக 25 வயதினையும் பூர்த்தி அடைந்தவாராக இருக்க வேண்டும்.
மேலும் அந்தந்த பிரிவினருக்கு ஏற்ப வயது தளர்வினையும் கொடுத்துள்ளனர்.இதன்படி தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு 5 வருடம் வயது தளர்வினையும், பிற்படுத்தப்பட்டோருக்கு 3 வருடமும், ஊனமுற்றோருக்கு 10 வருடம் வயது தளர்வினையும் அளித்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை காணலாம்.
கல்வி தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்க ஏதேனும் அங்கிகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பட்டப்படிப்பினை பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு நிலை:
- எழுத்து தேர்வு
- ஆவண சரிபார்ப்பு
- மருத்துவ தேர்வு
மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
https://www.idbibank.in/pdf/careers/Detailed-Advertisement-Executive-On-Contract-2023-24.pdf