நான் அவுட்டா..? செம கடுப்பாகி ஸ்டிக்கை உடைத்து சம்பவம் செய்த இந்திய மகளிர் கேப்டன்…வைரலாகும் வீடியோ.!

வங்கதேசத்துக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் நடுவரை அசிங்கமாக திட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கிடையே நடைபெற்ற 3-வது மற்றும் தொடரை நிர்ணயிக்கும் போட்டி மிர்பூரில் வெற்றியும் இல்லாமல் தோல்வியும் இல்லாமல் சமனில் முடிந்தது.

இந்த போட்டியின் போது  இந்திய கிரிக்கெட் கேப்டன் ஹர்மன்பிரித் கவுருக்கு நடுவர் தவறான முடிவு வழங்கியதால் கோபத்துடன் ஸ்டெம்பை உடைத்து, தகாத வார்த்தையால் திட்டியபடி பெவிலியன் திரும்பினார். நேற்றைய போட்டியில் இந்தியாவின் தோல்விக்கு நடுவரின் தவறான முடிவும் என்றும் கூறப்படுகிறது.

அது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மீண்டும் ஒரு வீடியோ வெளியாகி வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போட்டி சமநிலையில் முடிந்த காரணத்தால்  இரு அணிகளும் கோப்பையை பகிர்ந்து கொள்ளும் சமயத்தில், வங்கதேச அணி கேப்டனிடம் ஹர்மன்ப்ரீத் நடுவரையும் அழைக்குமாறு கூறினார்.

இதனால் மைதானத்தில் சற்று பரபரப்பு நிலவியது. அதன் பிறகு, மீண்டும் இரண்டு  அணிகளும் இணைந்து கோப்பையை பகிர்ந்துகொள்ளும்போது போட்டோவுக்கு போஸ் கொடுக்க வந்தனர்.  போதும், இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத், வங்கதேச அணி கேப்டனிடம் நீங்கள் மட்டும் ஏன் இருக்கிறீர்கள் நடுவரையும் வர சொல்லுங்கள்  என கேட்டார். இதனால், அதிருப்தியான வங்கதேச அணி கேப்டன் தனது அணியுடன் கிளம்பிவிடுவார். இந்த வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Comment