இலங்கைக்கு எதிரான தொடரில் ரோகித், கோலிக்கு ஓய்வு – கவுதம் காம்பீர் சொன்னது என்ன?

0
50

இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இடையிலான கிரிக்கெட் தொடர் விரைவில் துவங்க இருக்கிறது. எனினும், இந்த தொடருக்கான இந்திய அணி வீரர்கள் விவரம் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இலங்கைக்கு எதிரான தொடரில் யார் யார் விளையாடுவார்கள் என்பது பற்றி இதுவரை தெளிவான முடிவு இல்லை.

இந்த நிலையில், நட்சத்திர வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் ஒருநாள் தொடரில் விளையாடுவது கேள்விக்குறியான விஷயம் தான் என்று தகவல்கள் வெளியாகின. இவர்கள் டி20 உலகக் கோப்பையை வென்றதற்கான விடுமுறை காலத்தை நீட்டிக்க பிசிசிஐ-க்கு கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Rohit, Virat kohli, Bumrah

எனினும், இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் கவுதம் காம்பீர், மூத்த வீரர்கள் விடுமுறை நீட்டிப்பு கேட்கும் விவகாரத்தில் புருவம் உயர்த்தியுள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில், ஒருநாள் தொடருக்கான அணியில் தன்னை சேர்க்க வேண்டாம் என்று ஹர்திக் பாண்டியா கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தனிப்பட்ட காரணங்களால் தன்னால் இந்த தொடரில் விளையாட முடியாது என்று ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளதாக தெரிகிறது.

இந்த விவகாரத்தில் ஹர்திக் பாண்டியாவுக்கு அனுமதி கிடைக்கும் என்றும் ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் பும்ரா இலங்கை அணிக்கு எதிரான தொடரில் விளையாட வேண்டும் என்று கவுதம் காம்பீர் விரும்புவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இலங்கை அணிக்கு எதிரான தொடருக்கு பிறகு இந்திய அணிக்கு நீண்ட இடைவெளி கிடைக்கும் என்று கவுதம் காம்பீர் மூன்று வீரர்களிடமும் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது.

இலங்கை மற்றும் இந்தியா அணிகள் மோதும் ஒருநாள் போட்டி தொடர் ஆகஸ்ட் 02 ஆம் தேதி துவங்குகிறது. இந்த தொடர் ஆகஸ்ட் 07 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும் தொடரில் இந்திய அணி இங்கிலாந்து அணியை எதிர்கொண்டு விளையாட உள்ளது. இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் உடனான தொடருக்கு இடையில் ஐந்து மாதங்கள் வரை இடைவெளி இருக்கிறது.

இங்கிலாந்து தொடரை தொடர்ந்து இந்திய அணி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாடும். இந்த தொடரில் இந்திய அணி தனது போட்டிகளை ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பாகிஸ்தான் அல்லது இலங்கை என எந்த நாட்டில் விளையாடும் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.

google news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here