india
மத்திய பட்ஜெட்டில் புறக்கணிக்கப்பட்ட தமிழ்நாடு… இந்தியாவிற்குள் தான் இருக்கோமா?
மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் ஆகி இருக்கும் நிலையில் பெரிய அளவிலான விமர்சனங்களை கிளப்பியிருக்கிறது. இந்த பட்ஜெட்டில் பீகார் மற்றும் ஆந்திராவிற்கு நிதி மழை குவிந்த ஒரு நிலையில் தமிழ்நாடும் மொத்தமாக மத்திய அரசு ஒதுக்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இன்றைய மத்திய பட்ஜெட்டில் பீகார் மற்றும் ஆந்திர மாநிலத்திற்கு நிறைய சலுகைகளையும், பல லட்சம் கோடி நிதியையும் ஒதுக்கி இருக்கும் நிலையில் பட்ஜெட் முறையில் தமிழ்நாடு என்ற வார்த்தையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு முறை கூட உச்சரிக்காதது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
வெள்ள தடுப்பு பணிகளுக்காக அஸ்ஸாம், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களுக்கு 11 ஆயிரத்து 500 கோடி ரூபாய் நிதியாக ஒதுக்கப்பட்டிருக்கும் நிலையில் கடந்த டிசம்பர் மாதம் சென்னை, தூத்துக்குடி, திருநெல்வேலி பகுதியில் பெரிய அளவிலான வெள்ளை சேதத்தை கண்ட தமிழ்நாட்டிற்கு எந்தவித நிதியும் ஒதுக்கப்படவில்லை. வழக்கமாக மத்திய பட்ஜெட்டில் திருக்குறள் போன்ற தமிழ் இலக்கியங்கள் இடம்பெறும்.
ஆனால் இந்த முறை தமிழ் என்ற வார்த்தை கூட இடம் பெறாமல் பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது.இது போலவே இந்தியாவில் சமீப காலமாக அதிக அளவிலான ரயில் விபத்துகள் நடந்தும் மத்திய பட்ஜெட்டில் ரயில்வேக்காக எந்தவித அறிவிப்பும் இல்லாமல் இருப்பதும் பெரிய அளவில் பேசும் பொருளாகி இருக்கிறது.
இதைத்தொடர்ந்து தமிழகத்தை சேர்ந்த விமசகர்கள் இது பீகார் மற்றும் ஆந்திராவிற்கான பட்ஜெட். ஆட்சியை கைப்பற்றுவதற்கான இன்சூரன்ஸ் என விமர்சித்து வருகின்றனர். மேலும் தமிழக எம்பிக்களும் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.