Connect with us

india

நாடு முழுவதும் 9 லட்சம் பேர் எழுதிய நெட் தேர்வு ரத்து!.. மத்திய அரசு அதிரடி..

Published

on

net

இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்பிற்கான மத்திய அரசின் உதவித் தொகையை பெறவும் நெட் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். என்.டி.ஏ (தேசிய தேர்வுகள் முகமை) சார்பில் ஒவ்வொரு வருடமும் ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் கம்ப்யூட்டர் வழியாக இந்த தேர்வு நடத்தப்படும்.

அதன்படி இந்த வருட ஜுன் மாதத்திற்கான தேர்வு 317 நகரங்களில் உள்ள 1205 மையங்களில் கடந்த 18ம் தேதி நெட் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வுக்கு 11,21,225 பேர் விண்ணப்பித்து அவர்களில் 9,08,580 பேர் எழுதினார்கள். அதன்பின் விடைகளை திருத்தி முடிவுகளை வெளியிட என்.டி.ஏ திட்டமிட்டிருந்த நிலையில் நேற்று இரவு மத்திய கல்வி அமைச்சகம் ஒரு திடீர் அறிவிப்பை வெளியிட்டது.

அதில், தேர்வின் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக கடந்த 18ம் தேதி நடந்த நெட் தேர்வு ரத்து செய்யப்படுகிறது. விரைவில் புதிய தேர்வு நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்படும்’ என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதோடு, தேர்வில் முறைகேடுகள் நடந்திருப்பதாக புகார் எழுந்திருப்பதால் இது பற்றி விசாரிக்க சிபிஐ வசம் ஒப்படைக்க உள்ளதாகவும் கூறப்பட்டிருக்கிறது.

இதைத்தொடர்ந்து நெட் தேர்வு எழுதிய 9 லட்சம் பேர் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *