Connect with us

latest news

சென்னை போலீஸ் கமிஷனர் பணியிட மாற்றம்… புது ஆணையர் யார் தெரியுமா…?

Published

on

சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டார். இவரின் கொலை சம்பவம் தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. மேலும் தமிழகத்தில் அரசியல் கொலைகளும், கொலை முயற்சிகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாக அரசியல் கட்சியினர் பலரும் குற்றம் சாட்டி வந்தனர். இந்நிலையில் சென்னை பெருநகர காவல் ஆணையராக பணியாற்றி வந்த சந்திப் ராய் ரத்தோர் தற்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பயிற்சி பள்ளி நியமனம் செய்யப்பட்டு இருக்கின்றார். மேலும் சட்ட ஒழுங்கு ஏடிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதத்தை நியமனம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

மேலும் சென்னை பெருநகர காவல் ஆணையராக ஏடிஜிபி அருணை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த கொலை வழக்கில் 11 பேர் தற்போது வரை கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். மேலும் சென்னையின் 110 வது போலீஸ் கமிஷனராக ஏடிஜிபி அருண் நியமனம் செய்யப்பட்டுள்ளார். விரைவில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.

google news