Connect with us

india

ரூ.1.1 கோடி இன்சூரன்ஸ் பணத்துக்காக 2 முறை இறப்பு… மோசடி வெளிவந்தது எப்படி?

Published

on

இன்சூரன்ஸ் பணம் ரூ.1.1 கோடிக்காக இரண்டு முறை இறந்ததாக வெவ்வேறு பெயர்களில் மோசடி செய்த மும்பை பெண் மற்றும் அவரின் குடும்பத்தினரை போலீஸார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மும்பை பயாந்தர் பகுதியைச் சேர்ந்தவர் கஞ்சன் ராய். இவர் கடந்த 2021 அக்டோபர் 11-ல் மாரடைப்பால் உயிரிழந்ததாக அவரது மகன் தன்ராஜ் என்பவர் காப்பீட்டு நிறுவனத்துக்குத் தகவல் தெரிவிக்கிறார். இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட தேவையான ஆவணங்களை அவர் தாக்கல் செய்ததும், நேரில் விசாரணை மற்றும் ஆவணங்கள் சரிபார்ப்புக்குப் பின் அவரின் வங்கிக் கணக்குக்கு காப்பீட்டுப் பணம் ரூ.20.4 லட்சம் அனுப்பப்படுகிறது. அதேபோல், மற்றொரு காப்பீட்டு நிறுவனம் ரூ.25 லட்ச ரூபாய் காப்பீடு பணத்தையும் தன்ராஜூக்கு அனுப்புகிறது.

இதேபோல், கடந்த 2023 அக்டோபர் 20-ல் பவித்ரா என்பவர் இறந்ததாகவும், அவர் காப்பீடு செய்திருந்த பணம் வாரிசுதாரரான தனக்கு அளிக்க வேண்டும் என காப்பீட்டு நிறுவனத்துக்கு ரோஹித் என்பவர் தகவல் கொடுக்கிறார். இதையடுத்து அவர் ரூ.24.2 லட்ச ரூபாய் இழப்பீடும் பெறுகிறார்.

ஆனால், இந்த ஆண்டு ஜனவரி 30-ம் தேதி வாக்கில் கணக்குகளைத் தணிக்கை செய்த இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு ஒரே முகவரியில் இரண்டு கிளெம்ய்கள் செட்டில் செய்யப்பட்டிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இதையடுத்து போலீஸில் புகார் கொடுக்கப்படுகிறது. விசாரணையில், ஏற்கனவே இறந்ததாகக் கணக்குக் காட்டிய கஞ்சன் ராய்தான், பவித்ரா என்கிற பெயரில் மீண்டும் போலியாக இறந்த கணக்குக் காட்டி மோசடி செய்தது தெரியவந்திருக்கிறது.

மேலும், இதேபோல் 5 வெவ்வேறு காப்பீட்டு நிறுவனங்களில் போலி ஆதார், பான் கார்டு, இறப்பு சான்றிதழ் போன்றவற்றை சமர்ப்பித்து ரூ.1.1 கோடி வரை மோசடி செய்ததும் தெரியவந்திருக்கிறது. அவருக்கு அரசு ஊழியர்கள், இன்சூரன்ஸ் நிறுவன அதிகாரிகள் உடந்தையாக இருந்திருக்கலாம் என்கிற சந்தேகமும் வலுத்திருக்கிறது. இந்தநிலையில், கஞ்சன் ராய் என்கிற பவித்ரா தனது குடும்பத்தினருடன் தலைமறைவாகிவிட்டார். அவரைக் கைது செய்ய மும்பை போலீஸார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *