latest news
மறக்க முடியாத காதல்!. காதலன் துணையோடு கணவனை போட்டு தள்ளிய மனைவி!..
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகேயுள்ள சீத்தாகுட்டை கிராமத்தில் வசித்து வந்தவர் ராம்குமார். இவருக்கு வயது 26. இவர் ஒசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வந்தார். இவர் 8 மாதங்களுக்கு முன்பு சூளகிரி பகுதியை சேர்ந்த சுஜாதா (19) என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில்தான், நேற்று முன்தினம் வீட்டில் ராம்குமார் தலையில் ரத்தக்காயங்களுடனும், ஒயரால் கழுத்து இறுக்கப்பட்டும் இறந்து கிடந்தார். அவரின் உடலை கைப்பற்றிய போலீசார் இது கொலை என்பதை கண்டுபிடித்தனர். அவர்களின் சந்தேகம் ராம்குமாரின் மனைவி சுஜாதா மீது திரும்பியது.
அவரை விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது. ராம்குமாரை திருமணம் செய்வதற்கு முன்பு சுஜாதா கணேசன் என்பவரை காதலித்து வந்தார். அவரையே திருமணம் செய்யவும் ஆசைப்பட்டிருக்கிறார். ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சுஜாதாவின் பெற்றோர் அவரை ராம்குமாருக்கு திருமணம் செய்து வைத்துவிட்டனர்.
இந்த தகவல் ராம்குமாருக்கு தெரியவர அவர் சுஜாதாவை கண்டித்திருக்கிறார். அவருடன் வாழ விரும்பாத சுஜாதா கணேசனுடன் சேர்ந்து ராம்குமாரை கொலை செய்வது என முடிவெடுத்தார். கணசனோடு ஒரு 17 வயது சிறுவனும் இதற்கு உதவி செய்திருக்கிறார். ராம்குமாரை தூங்கிய பின் வீட்டுக்கு கணேசன் வந்திருக்கிறார். அதன்பின் அவரும், அந்த 17 வயது சிறுவன் மற்றும் சுஜாதா மூவரும் சேர்ந்து தலையில் கடுமையாக தாக்கியும், ஒயரால் அவரின் கழுத்தை இறுக்கியும் கொலை செய்துள்ளனர்.
இது எல்லாவற்றையும் சுஜாதா வாக்குமூலமாக போலீசாரிடம் ஒப்புக்கொண்டார். இதையடுத்து சுஜாதா, கணேசன் மற்றும் அவருக்கு உதவிய அந்த 17 வயது சிறுவன் மூவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.