Connect with us

Cricket

இன்னைக்கு இப்படி பேசுறாங்க.. நாளைக்கு..? விமர்சித்தவர்களை வச்சு செய்த ரியான் பராக்..!

Published

on

riyan-parag-Featured-Img

இந்திய கிரிக்கெட் அணியின் வளர்ந்து வரும் வீரர் ரியான் பராக் தன்மீது விமர்சம் வைத்தவர்களுக்கு கடுமையான பதிலடி கொடுத்திருக்கிறார். இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) தொடரில் நன்று அறிமுகமான வீரர் ரியான் பராக். 2019 ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இவரை ரூ. 20 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது.

2022 ஆம் ஆண்டு ஐ.பி.எல். போட்டிகளின் போது ரியான் பராக்-ஐ அணியில் இருந்து விடுவித்து, ஏலத்தில் ரூ. 3.8 கோடி கொடுத்து மீண்டும் அணியில் சேர்த்து கொண்டது. இதன் மூலம் ரியான் பராக் நல்ல அறிமுகத்தை பெற்றார். அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டதால், அதிக வரவேற்பு மற்றும் விமர்சனங்களுக்கும் ஆளானார் ரியான் பராக்.

riyan-parag

riyan-parag

54 ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடி இருக்கும் ரியான் பராக் 600 ரன்களை குவித்து இருக்கிறார். இவரது சராசரி 16.22 ஆகவும், ஸ்டிரைக் ரேட் 123.97 ஆகவும் உள்ளது. சமீபத்திய ஐ.பி.எல். போட்டியில் மோசமான ஆட்டம் காரணமாக அதிக விமர்சனங்களை எதிர்கொண்டார் ரியான் பராக். மேலும் களத்தில் ஆக்ரோஷமான கொண்டாட்டங்களாலும் இவர் மீது ஏராளமான விமர்சனங்கள் வைக்கப்பட்டன.

இந்தியா ஏ அணிக்காகவும் விளையாடி இருக்கும் 21 வயதான ரியான் பராக், சமீபத்தில் நடைபெற்ற வளர்ந்து வரும் அணிகளுக்கான ஆசிய கோப்பையிலும் இடம்பெற்று இருந்தார். இந்த தொடரின் இறுதி போட்டியில் இந்தியா ஏ அணி பாகிஸ்தான ஏ அணியிடம் தோல்வியுற்றது. எனினும், சமீபத்தில் நடைபெற்ற தியோதர் கோப்பை தொடரில் ரியான் பராக் மீண்டும் ஃபார்முக்கு வந்துள்ளார்.

riyan-parag-1

riyan-parag-1

தியோதர் கோப்பை தொடரில் 354 ரன்களை விளாசிய ரியான் பராக் ஸ்டிரைக் ரேட் 136.68 ஆகும். இந்த நிலையில், தன் மீது எழுந்த விமர்சனங்களுக்கு ரியான் பராக் அதிரடியாக கருத்து தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது..,

“சமீபத்திய தியோதர் கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். தற்போது மக்கள் என்னிடம் திறமை இருப்பதாக கூறி வருகின்றனர். நாளை ஒரு போட்டியில் நான் தோல்வியுற்றாலும், அவர்கள் என்னை பற்றி மோசமாக பேசுவார்கள். இதுபோன்ற கருத்துக்களை தெரிவிப்பதில் எந்த அவசியமும் இல்லை. யாரும் என்னிடம் வந்து, என்மீது இருக்கும் பிரச்சனையை தெரிவிக்கவில்லை,” என்று தெரிவித்தார்.

google news