Connect with us

india

இந்தியர்கள் ஆண்டு வருமானத்தினை விட மூன்று மடங்கு இதுக்கு தான் அதிக செலவு செய்றாங்களாம்!

Published

on

அமெரிக்கர்களை விட இந்தியர்கள் அதிகம் செலவு செய்வது என்னவோ கல்விக்கு இல்லாமல் திருமணத்துக்கு தான் என்ற ஆய்வு முடிவுகள் பலருக்கு ஆச்சரியத்தினை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்திய குடிமகன்கள் தங்கள் வருமானத்தில் இருந்து உணவு, மளிகை பொருட்களை விட திருமணத்துக்கு தான் அதிக செலவு செய்கின்றனர். இந்தியாவில் ஆண்டுக்கு 10 லட்சம் கோடி திருமணத்துக்கு மட்டுமே செலவு செய்யப்படுகிறது. மேலும், இது கல்விக்கு ஆகும் செலவை விட இரண்டு மடங்கு அதிகம் எனக் கூறப்படுகிறது.

நியூயார்க்கை தலைமையிடமாக கொண்ட ஜெப்ரீஸ் நிறுவனம் இந்தியர்கள் செய்யும் செலவுகள் குறித்து ஒரு ஆராய்ச்சி நடத்தியது. அந்த ஆராய்ச்சி முடிவுகள் கூறுகையில், இந்தியாவில் திருமணத்துக்கு மட்டுமே 10 லட்சம் கோடி செலவு செய்யப்படுகிறது. 

ஒவ்வொரு திருமணத்திற்கும் 12.5 லட்சம் வரை சராசரியாக செலவு செய்யப்படுகிறது. இந்தியர்களின் சராசரி ஆண்டு வருமானமே 4 லட்சமாக இருக்க அவர்கள் மூன்று மடங்கு அதிகமாக ஒரு திருமணத்திற்கு செலவு செய்கின்றனர். தனி நபரின் ஆண்டு வருமானத்தினை கணக்கிடும் போது இது ஐந்து மடங்காக இருப்பதாக கூறப்படுகிறது.

திருமண செலவில் 30 சதவீதம் ஆடைகள் மற்றும் நகைகள் வாங்க செலவாகிறது. உணவு பொருட்களுக்கு 20 சதவீதம் செலவு செய்யப்படுகிறது. இதை விட போட்டோகிராபி, மேக்கப் உள்ளிட்ட ஆடம்பரங்களுக்கே அதிக அளவு இந்திய திருமணங்களில் செலவு செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: இந்திய அணிக்கு உலக கோப்பைகள் கொடுத்த முக்கிய கேட்சுகள்… கபில்தேவ் முதல் சூர்யகுமார் வரை…

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *