cinema
எம்.ஜி.ஆர்.பார்த்த கடைசி தமிழ்ப் படம் எது தெரியுமா?… இந்த நடிகருக்கு தான் அந்த லக் இருந்திருக்கு!…
‘புரட்சித் தலைவர்’ என அழைக்கப்பட்டவர் எம்.ஜி.ஆர். இவரது பெயர் தமிழ் சினிமா இருக்கும் வரை ஒலித்துக் கொண்டே தான் இருக்கும். அந்த அளவு வெற்றிப் படங்களை கொடுத்திருந்தார். அதே போல அவரது அரசியல் வாழ்விலும் மிகப்பெரிய உயரத்தையும் பார்த்தவர்.
“வாத்தியார்” என அன்போடு அழைக்கவும் பட்டவர் எம்.ஜி.ஆர். அவரது பாடல்களில் அதிகம் சமூகத்திற்கு தேவையான கருத்துக்களை சொல்லியிருந்தார். மனிதன் எப்படி வாழ்ந்தால் வெற்றி பெறலாம் என்பதனை தனது பாடல் வரிகளின் மூலம் அறுவுறுத்தியிருந்தார்.
அரசியலில் தீவிரம் காட்டியதிலிருந்தே திரைப்படங்களில் நடிப்பதை முற்றிலுமாக தவிர்த்தார் பொது வாழ்க்கையின் மூலம் மக்களுக்கு சேவை செய்வதற்காகவே.
அரசியலில் உச்சத்தில் இருந்த நேரத்தில் கூட திரைப்பட வெற்றி விழாக்களில் விருப்பத்தோடு பங்கேற்று நடிகர், நடிகைகளை மனமார பாராட்டிவதை வழக்கமாக வைத்திருந்தார்.
நேரம் கிடைத்த போதெல்லாம் தமிழ் படங்களை பார்ப்பதையும் பழக்கமாக வைத்திருந்திருக்கிறார். மேடையில் ஒரு முறை நடிகரும், இயக்குனருமான பாக்யராஜின் ‘முந்தானை முடிச்சு” படத்தை பற்றி கூட பேசியிருந்தார்.
இன்றைய ஹீரோக்கள் பலருக்கும் ரோல் மாடலாக இருந்து வருபவர் எம்.ஜி.ஆர். அவர் கடைசியாக பார்த்த தமிழ் திரைப்படம் எது தெரியுமா?.
சத்யராஜ் நடித்து பாரதிராஜா இயக்கியிருந்த “வேதம் புதிது” என சொல்லப்படுகிறது.
சமத்துவம் பற்றி பேசியிருந்த அந்தப் படத்தில் சரிதா, ராஜா, அமலா, ஜனகராஜ் உள்ளிட்ட பலரும் அதில் நடித்திருந்தனர்.
இந்த படத்தின் கதாநாயகன் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன். அவரது பல படங்களில் எம்.ஜி.ஆரை பின் பற்றியே நடித்திருப்பார். அதே போல நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் சத்யராஜ் இணைந்து நடித்திருந்த சூப்பர் ஹிட் திரைப்படமான “ஜல்லிக்கட்டு” படத்தின் வெற்றி விழா தான் எம்.ஜி.ஆரின் வாழ் நாளில் கலந்து கொண்ட கடைசி விழா எனவும் சொல்லப்பட்டு வருகிறது.
எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகரான சத்யராஜுக்கு கிடைத்த பரிசாகவே இந்த இரண்டும் பார்க்கப்படுகிறது. எம்.ஜி.ஆர். பார்த்த கடைசி திரைப்படத்தின் நாயகனும் சத்யராஜே தான். அவர் பங்கேற்ற கடைசி சினிமா விழா படமும் சத்யராஜ் நடித்த “ஜல்லிக்கட்டு” தான்.