Connect with us

india

வீடியோ காலில் 6 மணிநேர ஹவுஸ் அரெஸ்ட் – லக்னோ கவிஞரின் அதிர்ச்சி அனுபவம்!

Published

on

லக்னோவைச் சேர்ந்த பிரபல கவிஞரும் எழுத்தாளருமான நரேஷ் சக்சேனாவை ஹேக்கர்கள் சில சுமார் 6 மணி நேரத்துக்கு டிஜிட்டல் ஹவுஸ் அரெஸ்டில் வைத்திருந்த சம்பவம் அரங்கேறியிருக்கிறது.

பணமோசடி புகாரில் அவரை மிரட்டி பணம் பறிக்க நினைத்த அந்த கும்பலால் அவரிடம் இருந்து பணம் பறிக்க முடியவில்லை. கடந்த ஜூலை 7-ம் தேதி மதியம் 3 மணியளவில் ஒரு கவிதை வாசிப்பு நிகழ்வுக்காக வீட்டிலிருந்து கிளம்பிருக்கிறார் நரேஷ். அப்போது அவரது போனுக்கு வீடியோ காலில் ஒரு அழைப்பு வந்திருக்கிறது.

அந்த காலில் பேசிய நபர் டிப்-டாப்பாக போலீஸ் சீருடை அணிந்திருந்ததுடன், தன்னை சிபிஐ இன்ஸ்பெக்டர் ரோஹன் ஷர்மா என்று அடையாளப்படுத்தியிருக்கிறார். கவிஞரிடம் ஆதார் கார்டு தொலைந்துவிட்டதா என்று கேட்ட அந்த நபர், அதைப் பயன்படுத்தி மும்பையில் ஒரு வங்கிக் கணக்குத் தொடங்கப்பட்டிருப்பதாகவும் அந்த வங்கிக் கணக்கு மூலம் பணமோசடி செய்யப்பட்டிருப்பதாகவும் சொல்லியிருக்கிறார்.

அவரின் ஆதார், வங்கிக் கணக்கு விவரங்களை எல்லாம் கேட்டுக்கொண்ட அந்த நபர், சொத்து விவரங்கள், முதலீடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களையும் கேட்டிருக்கிறார். வீடு முழுவதும் புத்தகங்களாக இருப்பதைப் பார்த்த அந்த நபர், இவரின் வேலை பற்றி கேட்கவும் கவிஞர் மற்றும் எழுத்தாளர் என்று சொல்லியிருக்கிறார்.

இதையடுத்து, இவரின் கவிதைகளோடு புகழ்பெற்ற சில கவிஞர்களின் கவிதைகளையும் வாசிக்கச் சொல்லி பல மணி நேரம் இவரோடு பேசியிருக்கிறார். மேலும், நல்ல மனிதரான உங்களைப் பற்றி என்னுடைய உயரதிகாரியிடம் சொல்கிறேன். 24 மணி நேரத்தில் இந்த விவகாரத்தில் இருந்து நீங்கள் வெளியில் வந்துவிடலாம் என்றெல்லாம் சொன்னாராம் அந்த நபர்.

ஒரு கட்டத்தில் குடும்பத்தினர் தலையிட்டு, போலீஸில் புகார் அளிக்கவே அவர்கள் வந்து கவிஞர் நரேஷ் சக்சேனாவை மீட்டிருக்கிறார்கள். மதியம் 3 மணிக்குத் தொடங்கிய இந்த வீடியோ கால் டிஜிட்டல் அரெஸ்ட் கிட்டத்தட்ட இரவு 8 மணியைத் தாண்டியும் நீண்டிருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப் பதிந்த லக்னோ சைபர் கிரைம் போலீஸார் விசாரணையைத் தீவிரப்படுத்தியிருக்கிறார்கள்.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *