Connect with us

cinema

தமிழ் சினிமாவில் ‘நிழல்கள்’ரவி இப்படி ஒரு சாதனையா!… தெரிஞ்சா பயம் வந்துடுமோ?…

Published

on

nilakal ravi

‘நிழல்கள்’ படத்தின் மூலம் சினிமாத்துறையில் நுழைந்தவர் ரவி. இந்த படம் வெற்றிப் படமாக மாறியது. இதனால் இவரது இயற்பெயரோடு அந்த படத்தின் பெயர் சேர்ந்து விட்டது. இப்போது வரை அவர் ‘நிழல்கள்’ ரவி என்று தான் அழைக்கப்படுகிறார்.

கதாநாயகனாக பல படங்களில் நடித்திருந்தவர் இவர். காலப்போக்கில் குணச்சித்திர வேடம் வில்லன் கதாப்பாத்திரம் என பல விதமான கேரக்டர்களில் ரவுண்டு கட்டத் துவங்கினார்.

ரஜினியின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றான “அண்ணாமலை”யில் சறகுணம் என்ற கேரக்டரில் வில்லன் ராதாரவியுடன் இணைந்து தனது வில்லத்தனத்தையும் காட்டியிருந்தார்.

கமல்ஹாசன் நடிப்பில் வெளியான “சிங்காரவேலன்” படத்திலும், பிரபு இரட்டை வேடத்தில் நடித்திருந்த “சின்ன வாத்தியார்” படத்திலும் இவரே தான் வில்லன். எந்த ரோல் கிடைத்தாலும் அதில் கச்சிதமாக நடித்து தனத் தேர்வை நியாயப்படுத்தி விடுவார் ‘நிழல்கள்’ரவி.

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் அஜீத் இரட்டை வேடங்களில் கதாநாயகனான நடித்திருந்த “வில்லன்” படத்தில் அஜீத்தின் அப்பாவாகவும், எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் விஜய் ஹீரோவாக வெளியான “குஷி” படத்திலும் விஜய்க்கு அப்பாவாகவும் நடித்திருந்தார் இவர். இது போல பல வெற்றிப்படங்களை உதாரணமாக சொல்லலாம் இவரது நடிப்பிற்கு.

இப்படிப்பட்ட நடிகர் ‘நிழல்கள்’ ரவி தமிழ் சினிமாவில் வெளியில் வராத சாதனை ஒன்றிற்கு சொந்தக் காரராக இருந்து வருகிறார். தமிழ் சினிமாக்களில் வெளியான திகிலுட்டும் காட்சிகளைக் கொண்ட பேய் படங்களில் அதிகமாக நடித்தவர் இவர் தானாம். அத்தகைய படங்களில் ஹீரோவாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்திருக்கிறார் ‘நிழல்கள்’ரவி. ‘மைடியர் லிசா’, ’13ம் நம்பர் வீடு’, ‘அந்தி வரும் நேரம்’, ‘அதிசய மனிதன்’ உள்ளிட்ட படங்களில் இவர் நடித்திருக்கிறார்.

ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்திருந்த இவர் இப்படிப் பட்ட சாதனையை செய்திருக்கிறார் என்பதை கேட்டுக்கும் போது ஒரு புறம் ஆச்சர்யம் புறப்படத்தான் செய்வதாக சினிமா ரசிகர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

google news