Connect with us

latest news

நீலகிரியில் நிலச்சரிவு?…நம்பிக்கை கொடுத்த ஆட்சியர்…

Published

on

Nilgiris Collector

கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். கேரளாவில் பெய்த பலத்த மழையின் காரணமாக இந்த நிலச்சரிவு திடீரென ஏற்பட்டது. இரவு நேரத்தில் இந்த இயற்கை பேரிடர் ஏற்பட்டதால் உயரிழப்புக்கள் அதிகமானதாக சொல்லப்படுகிறது.

நிலச்சரிவினால் கடும் பாதிப்புக்குள்ளான வயநாடு முண்டக்காய், சூரல்மலை, மெப்பாடியில் மீட்புப்பணிகள் முடிக்கி விடப்பட்டுள்ளது. கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் இந்த பெரும் துயரியத்திலிருந்து மீண்டு வர மக்கள் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்ய கோரிக்கை விடுத்துள்ளார். சேற்று மணலில் சிக்கியவர்களை மீட்கும் பணியானது இரவு பகலாக நடந்து வருகிறது.

Nilgiris

Nilgiris

வயநாட்டில் நடந்துள்ள இந்த இயற்கைச் சீற்றம் நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் நீலகிரியில் நிலச்சரிவு ஏற்படும் என சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. இதனால் நீலகிரி மக்கள் பெரும் அச்சத்திற்குள்ளானார்கள். இது குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். அதில் நீலகிரியில் நிலச்சரிவு ஏற்படும் என்ற சமூக வலைதள செய்திகளை பொது மக்கள் யாரும் நம்ப வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.

மாவட்டத்தின் முக்கிய பகுதிகளை இரவு நேரத்தில் கண்காணிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நீலகிரி மாவட்ட மக்களுக்கு நம்பிக்கையை கொடுத்துள்ளார். மேலும் வலைதளங்களில் வெளியான வதந்தி குறித்த சந்தேகங்களிலிருந்து பொது மக்கள் தெளிவடையும் விதமான விவரங்களை பெறக்கூடிய தொலைபேசி எண்ணையும் அறிவித்துள்ளார். இது குறித்த சந்தேகங்கள் ஏதுமிருந்தால் 1077 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விளக்கங்களை பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரியப்படுத்தியுள்ளார்.

google news