Connect with us

india

டெல்லி அரசு பள்ளியில் ஷாக்!… 9 வகுப்பில் ஒரு லட்சம் மாணவர்கள் தோல்வி… என்ன நடந்தது?

Published

on

2023-24 கல்வியாண்டுக்கான ஆண்டுத் தேர்வில் டில்லி அரசுப் பள்ளிகளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை என அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருக்கிறடு. இதேபோல், 50,000 பதினொன்றாம் வகுப்பு மாணவர்களும், 46,000 எட்டாம் வகுப்பு மாணவர்களும் ஆண்டுத் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை எனக் கூறப்படுகிறது

நிருபர் பாட்சா என்பவர் டெல்லி கல்வி இயக்குநரகத்திடம் தாக்கல் ஆர்டிஐ விண்ணப்பத்திற்கு பதிலளிக்கும் வகையில் இந்த தகவல் வெளியிடப்பட்டு இருக்கிறது. டெல்லியில் மொத்தமாக அரசுப் பள்ளிகள் 1,050ம், டாக்டர் பிஆர் அம்பேத்கர் சிறப்புப் பள்ளிகள் 37ம் உள்ளன. இதில், 2023-24ம் கல்வியாண்டில் ஒன்பதாம் வகுப்பை சார்ந்த மாணவர்கள் 1,01,331 பேர் தோல்வியடைந்துள்ளனர். 

மேலும், 2022-23ல் 88,409 பேரும், 2021-22ல் 28,531 பேரும், 2020-21ல் 31,540 பேரும் தோல்வியடைந்து இருப்பதாக கூறப்படுகிறது. 11ம் வகுப்பில் 2023-24 கல்வியாண்டில் 51,914 மாணவர்கள் தோல்வியடைந்துள்ளனர். இது 2022-23ல் 54,755ஆக இருந்தது. 2021-22 கல்வியாண்டில் இது 7,246ஆக இருந்தது.

2020-21ம் கல்வியாண்டில் 2,169ஆக மட்டுமே இருந்தது. கூடுதலாக கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ‘நோ டிடென்ஷன் கொள்கை’ ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து.எட்டாம் வகுப்பில், 46,622 மாணவர்கள் 2023-24 கல்வியாண்டில் தோல்வி அடைந்து இருக்கின்றனர்.

டில்லி கல்வித் துறையைச் சேர்ந்த பெயர் தெரிவிக்காத அதிகாரி கூறுகையில், புதிய ‘ உயர்வுக் கொள்கையின்’படி, 5 முதல் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் ஆண்டுத் தேர்வில் தோல்வியடைந்த அடுத்த வகுப்பிற்கு செல்ல மாட்டார்கள். இருப்பினும், இரண்டு மாதங்களுக்குள் மறுதேர்வு என்றொரு வாய்ப்பு கிடைக்கும்.

அந்த தேர்வில் தேர்ச்சி பெற, அந்த மாணவர்கள் ஒவ்வொரு பாடத்திலும் 25 சதவீதம் மதிப்பெண் பெற வேண்டும். தோல்வியுற்றால் ‘ரீபீட் பிரிவில்’ சேர்க்கப்பட்டு அடுத்த கல்வியாண்டு வரை அதே வகுப்பில் இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *