Connect with us

cinema

நடிகர் செந்திலுக்கு சான்ஸ் வாங்கிக் கொடுத்தது யாரு தெரியுமா?…அட இவரா?…இது தெரியாம போச்சே!…

Published

on

தமிழ் சினிமா எத்தனை நகைச்சுவை நடிகர்களைப் பார்த்திருந்தாலும், அதில் நடிகர் செந்திலுக்கு என தனி இடத்தை கொடுத்திருந்தது. அவரது குழந்தைத் தனமான நடிப்பினாலும், அப்பாவித்தனகான பாவனைகளாலும் ரசிகர்களால் தலையில் தூக்கி கொண்டாடப்பட்டு வந்தார் ஒரு காலத்தில்.

நடிகர் ரஜினிகாந்த் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை செந்திலுக்கு தனது படத்தில் வாய்ப்பு வழங்கி வந்ததோடு மட்டுமல்லாமல், படங்களில் அவரது கேரக்டர்களுக்கு அதிக முக்கியத்துவத்தையும் வழங்கி வந்தர்.

நடிகர் கமலுடன் கூட செந்தில் “மகாராசன்” போன்ற வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். பாக்யராஜ் நாடக நடிகராக இருந்து வந்த செந்திலை அவரது சகாக்கள் நடத்திய விதத்தினைப் பார்த்து துயரமடைந்து , அவர் இயக்கிய “தூரல் நின்னுப் போச்சு” படத்தில் நடிக்க வைத்திருந்தார். ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் பெரிய அளவில் முத்திரை பதிக்காமல் இருந்தாலும் தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டிருந்தார் செந்தில்.

கவுண்டமணியுடன் இவர் இணைந்து நடிக்கத் துவங்கிய பின்னர் தமிழ் சினிமாவின் முக்கிய காமெடியனாகவே மாறி விட்டார் குறிப்பிட்ட சில படங்களுக்கு பின்னர்.

Goundamani Senthil

Goundamani Senthil

“வைதேகி காத்திருந்தாள்”, ” சேரன் பாண்டியன்”, “நாட்டாமை”, “கரகாட்டக்காரன்” உள்ளிட்ட பல படங்களில் நடிகர் செந்தில் கவுண்டமணியுடன் இணைந்து நடித்திருந்தார். அதில் பல படங்கள் அதிகம் ஹிட் படங்களாகவே மாறியது.

அதிலும் சில படங்களின் கதை, கதாநாயகன், நாயகி, பாடல், இசை போன்றவை பெரிய அளவில் எடுபடாமல் போயிருந்தாலும், இவர்கள் இருவரின் நகைச்சுவையால் மட்டுமே வெற்றி பெற்றிருந்தன. கவுண்டமணியிடம் அடி வாங்கும் கேரக்டர்களும், அவரிடம் அதிகம் திட்டு வாங்கும் கேரக்டர்களே செந்திலுக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்திருந்தது.

நிஜமாகவே கவுண்டமணி செந்திலை அடிக்கிறார் என நினைத்து செந்தில் மீது பரிதாபம் கொண்டு, அந்த காட்சிகள் வரும் போதெல்லாம் செந்திலுக்காக அழுத ரசிகர்களும் இருந்திருக்கிறார்கள் ஒரு காலத்தில். அப்படி நகைச்சுவை காட்சி என்றாலும் கொடுமைக்காரராக பிறரது கண்களுக்கு தெரிந்த கவுண்டமணி தான் செந்திலை திரை உலகத்திற்கு அழைத்து வந்தவர்.

நாடக நடிகராக இருந்த வந்த செந்தில் தியேட்டர் ஸ்கிரீகளை பிடிக்கும் வேலைக்கு அழைத்துச் சென்ற போது தான் போலீஸ் வேடத்தில் நடிக்க ஆள் தேவைப் பட்டிருக்கிறது. அப்போது கவுண்டமணி செந்திலை பற்றி சொல்லி படத்தில் நடிக்க வாய்ப்பு வாங்கிக் கொடுத்திருக்கிறார்.

அதுவரை செந்தில் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்திருக்கிறார். திரையில் எதிரும், புதிருமாக காட்சியளித்தாலும் நிஜ வாழ்வில் இன்றும் இருவரும் நல்ல நண்பர்களாகவே இருந்து கொண்டிருக்கிறார்கள். அதோடு மட்டுமல்லாமல் பட வாய்ப்புகள் அதிகமாக இல்லாத இந்த நேரத்தில் கூட கவுண்டமணியும் செந்திலும் அடிக்கடி சந்தித்து பேசிக் கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *