Connect with us

india

நான் பேசியதை நீக்கலாம்.. உண்மையை நீக்க முடியாது!.. ராகுல் பேட்டி!…

Published

on

rahul gandhi

நேற்று பாராளுமன்றத்தில் பேசிய எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி பாஜக மீது பல குற்றச்சாட்டுக்களை வைத்தார். பல முக்கிய விஷயங்கள் குறித்து அவர் பேசினார்.

என்னிடம் நிமிர்ந்து கை குலுக்கும் சபாநாயகர் மோடியிடம் தலை வணங்கி கை குலுக்குவது ஏன்?.. மணிப்பூர் பிரச்சனைக்கு காரணமே பாஜகதான். மணிப்பூரில் உள்நாட்டு கலவரம் மூளும் சூழ்நிலைக்கு பாஜக தள்ளியது. வன்முறை ஏற்பட்ட மணிப்பூருக்கு மோடியும் அமித்ஷாவும் ஏன் செல்லவில்லை?’ என அவர் கேள்வி எழுப்பினார்.

மேலும், பிரதமர் மோடி கடவுளுடன் நேரடி தொடர்பு வைத்திருக்கிறார். அவரால் நேரடியாக கடவுளுடன் பேச முடியும். பரமாத்மா நேரடியாக மோடியிடம் பேசுவார். அப்படிப்பட்ட மோடி கடவுளிடம் கேட்டுதான் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டாரா?’ என கேட்டார் ராகுல்.

இந்துக்கள் என தன்னை கூறிக்கொள்பவர்கள் வன்முறை, வெறுப்பு பற்றி மட்டுமே பேசுகிறார்கள். இந்து மதம் என்பது பயம், வெறுப்பு, பொய்களை பரப்பும் மதம் அல்ல. ஆனால், பாஜக 24 மணி நேரமும் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறது. உண்மையான இந்துக்கள் வெறுப்புணர்வை தூண்ட மாட்டார்கள் என ராகுல் காந்தி பேசியிருந்தார்.

இதைத்தொடர்ந்து, நேற்று பாராளுமன்றத்தில் பாஜவுக்கு எதிராக ராகுல் காந்தி பேசிய பலவரிகள் அவைக்குறிப்பில் இடம்பெறாது என சபாநாயகர் ஓம் பிர்லா கூறியிருக்கிறார். சிறுபான்மை மக்களுக்கு எதிரானது பாஜக, அதானி, அம்பானி மீதான விமர்சனம், நீட் தேர்வு வணிகமயம் ஆகிவிட்டது என அவர் சொன்ன குற்றச்சாட்டு, அக்னிபாத் திட்டம் ராணுவத்திற்கானது அல்ல அது பிரதமர் அலுவலகத்திற்கானது என ராகுல் காந்தி பேசிய வரிகள் நீக்கம் செய்யப்படுவதாக கூறப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் ‘மோடியின் உலகத்தில் உண்மைகள் நீக்கப்படலாம். நான் உண்மையை மட்டுமே பேசினேன். அவர்கள் எதை வேண்டுமானாலும் நீக்கி கொள்ளட்டும். ஆனால், உண்மையை மூடி வைக்க முடியாது’ என சொல்லி இருந்தார்.

google news