india
நாடாளுமன்றத்திலிருந்து செங்கோலை நீக்குங்கள்… குரல் கொடுக்கும் சமாஜ்வாதி கட்சி
நாடாளுமன்றத்தில் இருந்து செங்கோலை நீக்கி அரசியலமைப்புச் சட்ட மாதிரியை வைக்க வேண்டும் என சமாஜ்வாதி கட்சி கோரிக்கை விடுத்திருக்கிறது.
செங்கோல்
புதிய நாடாளுமன்றக் கட்டத்தில் சபாநாயகர் இருக்கைக்கு வலதுபுறம் செங்கோல் வைக்கப்பட்டிருக்கிறது. இந்தநிலையில், உ.பியின் மோகன்லால்கஞ்ச் தொகுதியில் இருந்து வெற்றிபெற்ற சமாஜ்வாதி கட்சி எம்.பியான ஆர்.கே.சௌத்ரி எம்.பியாகப் பதவியேற்ற பின்னர், பொறுப்பு சபநாயகராக இருந்த பத்ருஹரி மாதபிடம் இதுதொடர்பாக கோரிக்கை அடங்கிய கடிதம் ஒன்றை சமர்ப்பித்தார்.
அந்தக் கடிதத்தில், எம்பியாகப் பதவியேற்ற பின்னர் சபாநாயகர் இருக்கைக்கு வலதுபுறம் இருக்கும் செங்கோலைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன். செங்கோல் என்பது மன்னராட்சியின் அடையாளம். ஜனநாயகத்தின் அடையாளமாய் திகழும் மாண்பமை பொருந்திய நாடாளுமன்றத்தில் அரசியலமைப்புச் சட்ட மாதிரியே வைக்கப்பட வேண்டும்.
இதுகுறித்து பதவியேற்பின்போதே பேச வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், அந்தக் கடிதத்தில் என்ன இருக்கிறது என்பது தெரியாத எதிர்வரிசை எம்.பிக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தைக் கூடும் என்பதாலேயே அதைக் கடிதம் வாயிலாகப் புகாராகப் பதிவு செய்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.
மோகன்லால்கஞ்ச் தொகுதி எம்.பியான ஆர்.கே.சௌத்ரி, தலித் உரிமைப் போராளியாக அறியப்படுபவர். பகுஜன் சமாஜ் கட்சியின் ஆரம்பகால எம்.பிக்களில் ஒருவர் ஆவார்.