தேசிய கொடியை அவமதித்தாரா ரோகித் சர்மா…? கோப்பையை வென்ற கையுடன் சர்ச்சையில் கேப்டன்…!

0
31

இந்திய அணியின் டி20 உலக கோப்பையை வென்ற பிறகு ரோகித் சர்மா செய்த செயல் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றது.

பார்படாசில் நடைபெற்ற t20 உலக கோப்பை இறுதிப்போட்டியில் தென்ஆப்பிரிக்கா அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலமாக 17 ஆண்டுகள் கழித்து இரண்டாவது முறையாக இந்திய அணி t20 உலக கோப்பை தொடரை கைப்பற்றியுள்ளது. இதில் இந்திய அணியின் கேப்டனான ரோகித் சர்மா மிகப்பெரிய மகிழ்ச்சி அடைந்தார்.

இதைத்தொடர்ந்து இறுதிப்போட்டி நடைபெற்ற மைதானத்தின் புல் மற்றும் மண்ணை எடுத்து சாப்பிட்டார் ரோஹித் சர்மா. அதைத்தொடர்ந்து மைதானத்தில் இந்திய நாட்டின் மூவர்ண கொடியை ஊன்றினார். இதைத்தொடர்ந்து டெல்லி வந்த இந்திய வீரர்களுக்கு மிகப்பெரிய உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மும்பை வான்கடே ஸ்டேடியமில் இந்திய அணிக்கு 125 கோடி ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட்டது.

இப்படி இந்தியா வெற்றி பெற்றதில் இருந்தே தொடர்ந்து கொண்டாட்டங்கள் அதிகரித்து வருகின்றது. மேலும் இந்திய வீரர்கள் ஒவ்வொருவரும் தங்களது சமூக வலைதள பக்கங்களில் பல புகைப்படங்களை பகிர்ந்து வந்தார்கள். ரோகித் சர்மாவும் நேற்று மாலை தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு சுயவிவர படத்தை மாற்றினார் இது ரசிகர்கள் கோபமடைந்து இருக்கிறார்கள்.

அதில் இந்திய நாட்டின் மூவர்ணக் கொடியை அவமரியாதை செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதாவது ரோகித் சர்மா மூவர்ண கொடியை தரையில் குத்தி இருக்கின்றார். இதில் கொடியானது தரையில் பட்டது. 1971 ஆம் ஆண்டு தேசிய மரியாதைக்கான அவமதிப்பு தடுப்புச் சட்டத்தின் படி கொடி வேண்டுமென்றே தரையிலோ அல்லது தண்ணீரிலோ பட அனுமதிக்க கூடாது.

அப்படி செய்தால் அது சின்னங்கள் அவமதிப்பு தடுப்பு சட்டம் 1971 பிரிவு இரண்டின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இச்செயலில் ஈடுபடுவோருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் என்று தெரிவித்திருக்கின்றார். இந்நிலையில் இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றது.

google news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here