india
குரங்க கொஞ்சினது ஒரு குத்தமா பா… மருத்துவமனையில் செவிலியர்களின் ரீல்ஸ்… அதிரடி சஸ்பெண்ட்…!
மருத்துவமனையில் குரங்குகளுடன் செவிலியர்கள் கொஞ்சி விளையாடி ரீல்ஸ் எடுத்த காரணத்தினால் அவர்களை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்து இருக்கிறார்கள்.
உத்தரபிரதேச மாநிலம் மருத்துவமனை ஒன்றில் பணியில் இருக்கும் போது செவிலியர்கள் குரங்குகளுடன் கொஞ்சி விளையாடியிருக்கிறார்கள். இந்த வீடியோ இணையத்தில் வெளியானதை தொடர்ந்து அந்த ஆறு செவிலியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கிறார்கள். உத்திரபிரதேசம் பக்ரைஸில் உள்ள அரசு மகளிர் மருத்துவமனையில் சீருடை அணிந்த செவிலியர்கள் குரங்குகளுடன் கொஞ்சி விளையாடி வந்தார்கள்.
மகப்பேறு பிரிவில் பனி நேரத்தில் குரங்குகளுடன் கொஞ்சி விளையாடிய சம்பவம் மிகப்பெரிய விமர்சனத்திற்கு உள்ளானது. பலரும் பலவிதமாக இந்த வீடியோ குறித்து பேசி வந்தார்கள். பணி நேரத்தில் நோயாளிகளை கவனிக்காமல் செவிலியர்கள் இப்படி எல்லாம் செய்வது தவறானது என்று பேசி வந்தார்கள். இந்த வீடியோ வைரலானதை பார்த்த மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் இயக்குனர் அந்த ஆறு செவிலியர்களையும் சஸ்பெண்ட் செய்து இருக்கின்றார்.
Six nurses suspended in UP's Bahraich for playing with monkey while on duty. pic.twitter.com/2Q1irJdBgM
— Raajeev Chopra (@Raajeev_Chopra) July 9, 2024
இது தொடர்பாக வெளியான சுற்றி அறிக்கையில் “செவிலியர்கள் பணியில் இருக்கும் போது குரங்கை வைத்து ரீல்ஸ் எடுத்து பணியில் அலட்சியம் காட்டும் வீடியோ வெளியாகி வைரலாகி மருத்துவக் கல்லூரியின் நற்பெயர்கள் களங்கம் ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில் உள்ள ஆறு செவிலியர்களும் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்கள்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது எனவும், இதை தொடர்ந்து ஐந்து மருத்துவர்களைக் கொண்ட குழு விசாரணை நடத்தி வருகிறது எனவும் அவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.