health tips
தொடர்ந்து 30 நாட்கள் சர்க்கரை சாப்பிடாமல் இருப்பது நமது உடலில் இவ்வளவு விளைவுகளை ஏற்படுத்துமா?
சர்க்கரை என்பது உடலுக்கு தீங்கு விளைவிக்ககூடிய பொருட்களில் ஒன்றாகும். இதனை நாம் தொடர்ந்து சாப்பிடுவதனால் நமக்கு பல தீங்கு விளைவிக்ககூடிய நோய்களும் அதனால் நமது உடலுக்கு பெரிய இழப்பும் ஏற்படுகிறது. 70%க்கு மேலான பதப்படுத்தப்பட்ட உணவுகள் சர்க்கரை சேர்த்துதான் தயாராகிறது. எனவே இந்த மாதிரியான உணவுகளை நாம் உண்ணும் பொழுது நமக்கு கல்லீரல் சம்பந்தமான நோய்கள், டைப்-2 சர்க்கரை நோய், இதயம் சம்பந்தமான நோய்கள் மற்றும் இன்னும் பல உடல்சார்ந்த நோய்களும் ஏற்படுகின்றன. இப்படிபட்ட சர்க்கரையை நாம் தொடர்ந்து 30 நாட்கள் புறக்கணிப்பதனால் நமது உடலின் பல நன்மை சார்ந்த விஷயங்கள் ஏற்படுகின்றன.
இரத்த சர்க்கரை:
சர்க்கரையை புறக்கணிப்பதனால் நமது இரத்தத்தில் உள்ள சர்க்கரை மற்றும் இன்சுலின் அளவு கட்டுக்குள் இருக்கும். நாம் தொடர்ந்து சர்க்கரை கலந்த உணவுகள் மற்றும் குளிர்பானங்களை அருந்துவதனால் நமது உடலில் டைப்-2 சர்க்கரை நோய் உண்டாகலாம்.
உடல் எடை:
நாம் உடல் எடையை குறைக்க டயட் இருக்கும் பொழுது பொதுவாக அதிக அளவு விட்டமின்கள் மற்றும் நார்சத்துள்ள உணவு பொருட்களை உண்போம். அச்சமயம் நாம் இதுபோன்ற சர்க்கரையை குறைத்து கொள்வது மிகவும் பயனளிக்ககூடியதாக அமையும். இவ்வாறு செய்வதனால் நமது உடல் எடையையும் பேணி பாதுகாக்கலாம்.
பற்களின் நலம்:
அதிக அளவு சர்க்கரை எடுத்து கொள்வதால் நமது பற்கள் மற்றும் ஈறுகள் பாதிக்கப்படுகின்றன. மருத்துவர்களின் ஆலோசனைப்படி நமது வாயில் உள்ள பாக்டீரியாக்கள் சர்க்கரையை சிதைவடைய செய்வதனால் நமது வாயில் ஒரு விதமால அமிலம் வெளியிடப்படுகிறது. இது நமது பல்லில் உள்ள எனாமலை பாதிக்கிறது. எனவே சர்க்கரையை புறக்கணிப்பதனால் நமது பற்களை பாதுகாக்கலாம்.
இதய நலன்:
சர்க்கரை அதிகமுள்ள உணவுகளை உண்பதனால் நமது உடலின் அதிக இரத்த அழுத்தம், அதிக கொழுப்பு மற்றும் இதய வலி போன்ற பல நோய்களும் ஏற்படலாம். சர்க்கரையை சாப்பிடுவதை நிறுத்தினால் நமது உடலின் நல்ல கொழுப்பு என அழைக்கப்படும் HDL Cholestral-ன் அளவை அதிகப்படுத்தலாம்.