india
கூகுள் நிறுவனத்தில் வேலை செய்வதற்கு… இந்த தகுதி இருந்தா மட்டும் போதும்… சுந்தர் பிச்சை கூறியது என்ன..?
கூகுள் நிறுவனத்தின் ஒவ்வொரு தயாரிப்புகளுக்கும் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. தொடர்ந்து பல்வேறு புதிய தொழில்நுட்ப அம்சங்களை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்து வருகின்றது. கூகுள் நிறுவனத்தில் வேலைக்கு சேர விரும்புவர்கள் இடம் தாங்கள் எதிர்பார்ப்பது என்ன? என்பது குறித்து அந்த நிறுவனத்தின் சிஇஓ ஆன சுந்தர் பிச்சை சமீபத்தில் கூறி இருக்கின்றார். அதை இதில் நாம் தெரிந்து கொள்வோம்.
கூகுள் நிறுவனம் உலகின் இணையதள சேவை மற்றும் செல்போன் செயலிகளில் முன்னிலை வகுக்கின்றது. இந்த கூகுள் நிறுவனத்தில் பணியில் சேர்வது என்பது பலரின் ஆசை மற்றும் லட்சியமாக இருக்கின்றது. இந்நிலையில் கூகுள் நிறுவனத்தின் வேலைக்கு சேர்வதற்கான தகுதி குறித்து அந்த நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்திருந்ததாவது ‘கூகுள் நிறுவனம் தற்போது சூப்பர் ஸ்டோர் பொறியாளர்களை எதிர்பார்க்கின்றது.
நிறுவனத்தின் பொறியாளர் குழுவில் சேர விருப்பம் உள்ளவர்கள் சிறந்தவர்களாகவும் புதிய சவால்களை ஏற்றுக்கொண்டு அதில் முன்னேறுபவர்களாக இருக்க வேண்டும். மேலும் ஊழியர்களுக்கு உணவு வழங்கப்படுகின்றது. அது அவர்களின் சமூக உணர்வை உருவாக்கும். புதிய சிந்தனை திறனை தூண்டவும் இது உதவும். கூகுள் வழங்கும் பணி ஆணைகளை 90 சதவீதம் பேர் ஏற்றுக்கொள்கிறார்கள்.
இது வேலை சந்தையில் கூகுள் நிறுவனத்திற்கு இருக்கும் ஒரு பெரிய வலிமையை காட்டுகின்றது. குறிப்பாக தொழில்நுட்ப துறையில் ஆட்கள் தேர்வு குறைந்துவிட்ட போதும் google பணி பெறுவது என்பது வடிவமைக்கதாக பார்க்கப்பட்டு வருகின்றது. ஆரம்பகட்ட தொழில்நுட்ப பணிகளுக்கு போட்டிகள் கடுமையாக உள்ளது. எனவே அந்த பணிகளுக்கு சேர விரும்பும் நபர்கள் தங்களை வேறுபடுத்தி காட்டுபவர்களாக இருக்க வேண்டும் என்று சுந்தர் பிச்சை தெரிவித்து இருக்கின்றார்.