latest news
நாளை பிறந்தாள்!. த.வெ.க. நிர்வாகிகளுக்கு விஜய் முக்கிய உத்தரவு!.. அரசியல் பரபர!…
நடிகர் விஜய் எதிர்பார்த்தது போலவே சில நாட்களுக்கு முன்பு தான் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்துவிட்டார். எனவே, அவர் அரசியலுக்கு வரவேண்டும் என ஆசைப்பட்ட அவரின் ரசிகர்கள் உற்சாகம் அடைந்திருக்கிறார்கள். அதேநேரம், 2026 சட்டமன்ற தேர்தலே தனது இலக்கு எனவும், அதற்கு இடையில் எந்த கட்சி போட்டியிடாது எனவும் அவர் சொல்லியிருக்கிறார்.
இப்போது விஜயின் அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகம் அடிப்படை வேலைகளை துவங்கிவிட்டது. விரைவில் திருச்சியில் மாநாடு ஒன்றை நடத்தவும் அக்கட்சி திட்டமிட்டிருக்கிறது. இந்த மாநாட்டில் 10 லட்சம் பேரை கலந்துகொள்ள வைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
ஒருபக்கம், கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி 50 பேர் பலியாகிவிட்டனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களை நேற்று மாலை விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் சொன்னார். பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் உதவிகள் செய்யப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் ஜூன் 22ம் தேதியான நாளை தனது பிறந்தநாளை கொண்டாடவிருந்தார். விஜய் அரசியலுக்கு வருவது உறுதியான பின் வரும் முதல் பிறந்தநாள் விழா இது. எனவே, இதை சிறப்பாக கொண்டாட த.வெ.க நிர்வாகிகள் திட்டமிட்டிருந்தனர். ஆனால், நாளை தனது பிறந்தாள் கொண்டாட்டங்களை தவிர்க்குமாறு தவெக நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவிட்டிருக்கிறார்.
கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தவர்கள் மற்றும் சிகிச்சை பெற்று வருபவர்களின் குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை செய்யும்படியும் அவர் வலியு|றுத்தி இருக்கிறார். இதைத்தொடர்ந்து தலைவரின் உத்தரவுப்படி தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என த.வெ.க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வலியுறுத்தியிருக்கிறார்.