india
விராட் கோலிக்கு சொந்தமான ஓட்டலில் போலீஸ் ரைடு… அப்படி என்னதான்பா நடந்துச்சு…!
விராட் கோலிக்கு சொந்தமான ஹோட்டல் மீது காவல்துறையினர் சட்டப்படியை நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி கிரிக்கெட் மட்டுமல்லாமல் விளம்பரங்கள் மாடலிங், வியாபாரம் என அனைத்திலும் கவனம் செலுத்தி வருகின்றார். விராட் கோலி இணை உரிமையாளராக இருக்கும் ஒன்8 கம்யூன் என்ற ஹோட்டல் மீது தான் தற்போது பெங்களூரு நகர காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக ஓட்டல் மேலாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதாவது பெங்களூருவில் நள்ளிரவு ஒரு மணி வரை மட்டும்தான் ஹோட்டல்கள் மற்றும் பார்கள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த ஓட்டலின் பார் நள்ளிரவு ஒரு மணி தாண்டியும் இயங்கி வருகின்றது. இதையடுத்து காவல் நிலையத்தில் ஒரு சிலர் அளித்த புகாரின் பெயரில் இந்த நிறுவனத்தின் மேலாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு முழுக்க நிர்ணயிக்கப்பட்டதை விட அதிக நேரம் சட்டவிரோதமாக இயங்கி வரும் ஹோட்டல்கள் பார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒன்8 கம்யூன் ஹோட்டல் ஆனது கடந்த டிசம்பரில் பெங்களூருவில் தொடங்கப்பட்டது. ஆனால் நாடு முழுக்க டெல்லி, மும்பை, பூனே மற்றும் கொல்கத்தா உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களில் இந்த ஹோட்டலில் கிளை இயங்கப்பட்டு வருகின்றது.