Connect with us

latest news

டக்குனு இரண்டு புது சலுகைகளை இறக்கிவிட்ட வோடபோன் ஐடியா.. இது லிஸ்ட்-ல இல்லையே..!

Published

on

Vi-Featured-Img

வோடபோன் ஐடியா நிறுவனம் இந்திய டெலிகாம் சந்தையில் இரண்டு புதிய பிரீபெயிட் ரிசார்ஜ் திட்டங்களை அறிவித்து இருக்கிறது. இந்த ரிசார்ஜ் திட்டங்களின் விலை முறையே ரூ. 198 மற்றும் ரூ. 204 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளன. இரண்டு புதிய பிரீபெயிட் ரிசார்ஜ் திட்டங்களிலும் டாக்டைம் பலன்கள் வழங்கப்படுகின்றன.

புதிய ரிசார்ஜ் திட்டத்தில் பயனர்களுக்கு அதிகபட்சம் 500MB வரையிலான டேட்டா வழங்கப்படுகிறது. முன்னதாக வோடபோன் ஐடியா நிறுவனம் ரூ. 24 மற்றும் ரூ. 49 விலையில் பிரீபெயிட் ரிசார்ஜ் திட்டங்களை அறிவித்த நிலையில், தற்போது புதிதாக இரண்டு பிரீபெயிட் ரிசார்ஜ் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

வோடபோன் ஐடியா ரூ. 198 பிரீபெயிட் ரிசார்ஜ் திட்டத்தில் பயனர்களுக்கு டேட்டா மற்றும் டாக்டைம் பேலன்ஸ் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கான வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். இரண்டு புதிய ரிசார்ஜ் திட்டங்கள் வழங்கும் பலன்கள் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

Phone-Use

Phone-Use

வோடபோன் ஐடியா ரூ. 198 மற்றும் ரூ. 204 ரிசார்ஜ் திட்ட பலன்கள் :

புதிய ரூ. 198 பிரீபெயிட் ரிசார்ஜ் திட்டத்தில் பயனர்களுக்கு ஒட்டுமொத்தமாக ரூ. 198 டாக்டைம் மற்றும் 500MB வரையிலான டேட்டா வழங்கப்படுகிறது. இந்த பிரீபெயிட் ரிசார்ஜ் திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். ரூ. 204 பிரீபெயிட் ரிசார்ஜ் திட்டம் ரூ. 204 டாக்டைம் மற்றும் 500MB டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கான வேலிடிட்டியும் 30 நாட்கள் தான்.

வோடபோன் ஐடியா நிறுவனத்தின் ரூ. 198 மற்றும் ரூ. 204 பிரீபெயிட் ரிசார்ஜ் திட்டங்கள் மும்பை மற்றும் குஜராத் வட்டாரங்களில் மட்டும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. நாட்டின் மற்ற வட்டாரங்களில் இந்த இரண்டு பிரீபெயிட் ரிசார்ஜ் திட்டங்கள் அறிவிக்கப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

Vi-Midnight-data

Vi-Midnight-data

புதிய ரூ. 198 மற்றும் ரூ. 204 வோடபோன் ஐடியா ரிசார்ஜ் திட்டங்கள் தவிர, ரூ. 17 விலையில் மற்றொரு ரிசார்ஜ் திட்டமும் பயனர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த பிரீபெயிட் ரிசார்ஜ் திட்டம் ஒரு நாள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. புதிய திட்டங்களை போன்று இல்லாமல், ரூ. 17 ரிசார்ஜ் திட்டம் நாடு முழுக்க அனைத்து வட்டாரங்களிலும் வழங்கப்படுகிறது.

பலன்களை பொருத்தவரை வோடபோன் ஐடியா ரூ. 17 பிரீபெயிட் ரிசார்ஜ் திட்டம் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 6 மணி வரை அன்லிமிடெட் டேட்டா வழங்குகிறது. இதன் வேலிடிட்டி ஒரு நாள் ஆகும்.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

latest news

1 முதல் 12-ஆம் வகுப்பு வரை… மாணவர்களுக்கு இதுதான் புது ரூல்ஸ்… கல்வித்துறை போட்ட அதிரடி உத்தரவு…!

Published

on

பள்ளி மாணவர்கள் இலவசமாக பஸ்பாஸ் வாங்குவதற்கு இந்த முறை புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் புது உத்தரவை பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் ஜூன் பத்தாம் தேதி திங்கட்கிழமை முதல் புதிய கல்வி ஆண்டு தொடங்கியது. அன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்ட மாணவர்களுக்கு தேவையான புத்தகங்கள், சீருடைகள், நோட்டுகள், வண்ண பென்சில்கள் அனைத்தும் வழங்கப்பட்டு வந்தது. பள்ளி திறந்து ஒரு மாதத்தை எட்ட உள்ள நிலையில் மாணவ, மாணவிகள் தொடர்ந்து தங்களது படிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் வெளியூரிலிருந்து வந்து படிக்கும் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. தற்போது பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் அட்மிஷன் முடிந்த பிறகு வகுப்பு வாரியாக மாணவர்களை புகைப்படம் எடுத்து உரிய விவரங்களை சேகரித்து போக்குவரத்து துறைக்கு அனுப்பி இலவச பஸ் பாஸ் எடுக்க வேண்டும்.

ஆனால் இந்த முறை எமிஸ் மூலம் இலவச பஸ் பாஸ் வாங்க விண்ணப்பிக்க வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இதற்காக மாணவர்களின் விவரங்களை ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் சேகரித்து பின்னர் ஆய்வக உதவியாளர்கள், தொழில்நுட்ப பயிற்சி நிபுணர்கள் ஆகியோரின் உதவியுடன் எமிஸ் தளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

எமிஸ் என்பது தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையில் கொண்டுவரப்பட்டிருக்கும் புதிய கல்வி மேலாண் தகவல் அமைப்பு. இதன் மூலமாக பள்ளி மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள் அனைவரது விவரங்களையும் தெரிந்து கொள்ள முடியும். மாணவ மாணவியர்களின் கற்றல் செயல்பாடுகளை இந்த எமிஸ் வலைதளத்தில் பதிவு செய்யப்படும்.

இதில் பதிவு செய்த தொலைபேசி எண்கள் மூலமாக மாணவ, மாணவிகளின் கற்றல் செயல்பாடுகளை நேரடியாக ரிப்போர்ட்டாக பெற்றோர்களுக்கு கொடுக்க முடியும். இதன் மூலம் தங்களது குழந்தைகளின் சிறிய விஷயங்களை கூட பெற்றோர்கள் உடனுக்குடன் தெரிந்து கொள்வார்கள். இந்நிலையில் எமிஸ் முறைப்படி தற்போது பஸ் பாஸ் விண்ணப்பிக்க பள்ளிக்கல்வித்துறை வலியுறுத்தியுள்ளது.

google news
Continue Reading

latest news

ஓவர் வேலையால் தற்கொலை செய்துக்கொண்ட ரோபோ!… அடங்கம்மா… இது புதுக்கதையால இருக்கு!

Published

on

By

ஓவர் வேலை, மன அழுத்தம் உள்ளிட்ட பிரச்னையால் பெரிய பெரிய வேலையில் இருப்பவர்கள் கூட தற்கொலை செய்து கொள்ளும் சேதிகளை தான் நாம் கேட்டு இருக்கிறோம். ஆனால் உலகில் முதல் முறையாக ரோபோ தற்கொலை செய்துக்கொண்ட நிகழ்வு பலருக்கு அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது.

இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக நாடுகள் மனிதர்களுக்கு மாற்றாக ஏஐ பயன்படுத்துவதை அதிகப்படுத்தி இருக்கிறது. பல இடங்களில் மனிதர்கள் செய்யும் வேலையை ரோபோ கையில் எடுத்துக் கொண்டது. மனிதர்களுக்கு சம்பளம் என பல முதலீடுகள் கொடுக்க வேண்டுமே என நினைக்கும் முதலாளிகள் ரோபோவை மாற்றாக பயன்படுத்துவதை எளிது என நினைக்கின்றனர்.

எவ்வளவு வேலை கொடுத்தாலும் அசால்ட்டாக பார்ப்பது, தேவையே இல்லாத விடுமுறை என எதுவும் இருக்காது என்பதால் மேலை நாடுகளில் ரோபோ பயன்பாடு தற்போது மிக அதிகமாகி இருக்கிறது. ஆனால் இந்த கூற்றே தற்போது பொய்யாகி இருக்கிறது.

அதாவது, தென் கொரியா அரசாங்கத்துக்கு கீழ் ரோபோ ஒன்று வேலை செய்து வந்து இருக்கிறது. திடீரென அந்த ரோபோ வேலை செய்து வந்த கட்டிடத்தின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது தான் உலகின் முதல் ரோபோ தற்கொலை என தகவல்கள் தெரிவிக்கிறது..

குறிப்பிட்ட ரோபோ தற்கொலை செய்துக்கொள்வதற்கு முன்னர் ஒரு இடத்தினையே சுற்றி சுற்றி வந்ததாகவும், குழப்பத்துடன் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது. ரோபோவின் உடைந்த பாகங்களை கைப்பற்றி இருக்கும் குழு தீர ஆராய்ந்த பின்னரே தற்கொலை காண காரணம் தெரியும் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டி: சூர்யகுமார் யாதவ் கேட்ச் சர்ச்சை – உண்மை இதுதான்!

google news
Continue Reading

latest news

மகளின் அந்தரங்க வீடியோவை காட்டி காசு கேட்ட இளைஞர்… சம்பவம் செய்த தந்தை…திருப்பூரில் பயங்கரம்

Published

on

By

மொபைல் மோகம் அதிகரித்ததில் இருந்து இளைஞர்கள் செய்யும் குற்றச்செயலும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது. அந்தரங்க விஷயங்களை புகைப்படமாக எடுப்பது பின்னர் அதையே தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துவதையும் செய்து வருகின்றனர்.

திண்டுக்கலை சேர்ந்த அன்பு(25) என்பவர் திருப்பூர் மாவட்டம் கணக்காம்பாளையத்தில் பைனான்ஸ் பிசினஸ் நடத்தி வந்தார். இவருக்கு அப்பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியுடன் பழக்கம் இருந்து இருக்கிறது. இருவரும் நெருக்கமாக இருந்ததை வீடியோ, புகைப்படமாகவும் அன்பு எடுத்து வைத்து இருக்கிறார்.

இந்த புகைப்படங்களை ஒருநாள் குடித்துக்கொண்டு இருக்கும் தன்னுடைய நண்பர் தமிழரசனிடம் காட்ட அவருக்கு இதை வைத்து காசு பறிக்கலாம் என்ற எண்ணம் தோன்ற அந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை அன்பிடம் இருந்து வாங்கி இருக்கிறார். அதை சிறுமியின் தந்தை சுந்தர்ராஜனுக்கு அனுப்பி காசு கேட்டு இருக்கிறார் தமிழரசன்.

இது பிரச்னையாக மாற சிறுமியின் தந்தை அவிநாசி காவல்நிலையத்தில் புகார் அளித்து இருக்கிறார். பின்னர் இவர்களிடம் பிரச்னை செய்யாமல் தன்னுடைய பெண் படங்களை வாங்கிவிட்டு இவர்களை காலி செய்ய வேண்டும் என திட்டமிட்டு கொள்கிறார். இந்த திட்டத்தினை நிறைவேற்ற தமிழரசனின் நண்பரான செல்லத்துரை என்பவரை நாடி இருக்கிறார்.

அவர்கள் திட்டப்படி சம்பவத்தன்று அன்பு, தமிழரசனின் நண்பர் செல்லத்துரை, சுந்தர்ராஜன் மூவரும் திருமுருகன்பூண்டி டாஸ்மாக்கில் குடித்து உள்ளனர். செல்லத்துரை இந்த விஷயத்தினை தனியாக பேச காந்திநகர் அருகே உள்ள அங்கையர் செல்வன் என்பவர் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். நான் இறங்கிய பின்னர் நீ இறங்கு எனக் கூறிய செல்லத்துரையை தொடர்ந்து அன்பு இறங்கினார்.

இவர்கள் திட்டப்படி வீட்டில் ஒளிந்திருந்த 8 பேர் அடங்கிய கூலிப்படை அன்புவை துரத்தி துரத்தி வெட்டியதில் அவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இதனையடுத்து அன்புவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். சிறுமியின் தந்தையை விசாரித்து வரும் நிலையில் பலர் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.

google news
Continue Reading

latest news

பஸ் கண்டக்டர்களுக்கு பரிசு… இத செஞ்சா மட்டும் போதும்… போக்குவரத்துதுறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!

Published

on

யுபிஐ செயலி மூலமாக அதிக டிக்கெட்டுகளை விற்பனை செய்யும் பேருந்து நடத்துனர்களுக்கு பரிசு வழங்கப்படும் என்று போக்குவரத்து துறை சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் மின்னணு பயணச்சீட்டு இயந்திரம் மூலம் பயணச்சீட்டு வழங்கும் வசதியை கொண்டு வந்திருக்கிறார்கள். இதன் மூலமாக அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள் தங்களது டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மூலமாக பணம் செலுத்தி பயன்டிகடுகளை பெற்றுக் கொள்ளலாம்.

தற்போது குறிப்பிட பேருந்துகளில் அதாவது அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் இந்த வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. இதில் பயணம் செய்யும் பயணிகள் தங்களது கூகுள் பே, போன் பே மற்றும் யுபிஐ-யை போன்றவற்றின் மூலமாக பணம் செலுத்தி பயண சீட்டுகளை பெற்றுக் கொள்ள முடியும். இந்த முறையை பயணிகளிடம் ஊக்குவிக்கும் விதமாக போக்குவரத்து கழகம் சார்பாக ஒரு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதில் “அரசு பேருந்துகளில் ஒவ்வொரு மாதமும் அதிகபட்சமாக மின்னணு பரிவர்த்தனை எண்ணிக்கை மூலம் பயணிகளுக்கு பயண சீட்டு வழங்கும் நடத்துனர்களுக்கு பரிசு தொகையும் அத்துடன் பாராட்டு சான்றிதழும் வழங்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகளிடம் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் நடத்துனர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்படும் என்று வெளியான இந்த அறிவிப்பு நடத்துனர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

google news
Continue Reading

latest news

90 மி.லி, பிளாஸ்டிக்கா இல்ல கண்ணாடி பாட்டிலா…? தமிழக அரசு பரிசீலினை… அவங்களே விட்டாலும் இவங்க விடமாட்டாங்க போலயே…

Published

on

90 மில்லி லிட்டர் மதுபானத்தை எந்த பாட்டிலில் விற்பனை செய்வது என்பது குறித்து தமிழக அரசு தீவிரமாக பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் சாப்பிட்டு சுமார் 65க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். அரசு விற்பனை செய்யும் மது பாட்டில்களை விலை கொடுத்து வாங்கும் அளவிற்கு வசதி இல்லாத ஏழை மக்கள் இது போன்ற குறைந்த விலையில் கிடைக்கும் கள்ளச்சாராயங்களை குடித்து வருகிறார்கள். இதனால் தமிழக அரசு குறைந்த விலையில் டெட்ரா பேக் என்ற மது விற்பனையை செய்ய வேண்டும் என்று குரல் எழுந்தது.

இதற்கு பலரும் எதிர்ப்பும் தெரிவித்து வந்தார்கள். ஏற்கனவே கடந்த 2001 ஆம் ஆண்டு தமிழகத்தில் கள்ளச்சாராயர் சாவு அரங்கேறியதை தொடர்ந்து 100 மில்லி லிட்டர் ரூபாய் 15 என்கின்ற மலிவு விலையில் மது விற்பனையை தொடங்கியது தமிழக அரசு. அதன் பின்னர் அந்த திட்டம் நாளடைவில் நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் அந்த திட்டத்தை தொடங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்திருக்கின்றது.

தமிழகத்தில் பூரண மது விலக்கு  கொண்டு வர வேண்டும் என்பது பலரது விருப்பம். ஆனால் தற்போது அது இல்லை என்பதை சட்டசபையில் அமைச்சர் முத்துசாமி கூறிவிட்டார். இது தொடர்பாக அமைச்சர் துரைமுருகன் கூறிய போது நமது பக்கத்து மாநிலங்களில் அதாவது கேரளா, கர்நாடகம், ஆந்திரா என அனைத்து மாநிலங்களிலும் மது விற்பனை நடைபெறும் போது நாம் மட்டும் எப்படி பற்றி கொள்ளாத கற்பூரமாக இருக்க முடியும் என்று கூறியிருந்தார்.

இதை வைத்து பார்க்கும் போது தமிழகத்தில் பூரண மதுவிலக்கு இப்போது இல்லை என்பது உறுதியாகிவிட்டது. எனவே ஏழை மக்கள் கள்ளச்சாராயம் வாங்குவதற்கு பதில் குறைந்த விலையில் மது பானங்களை விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது. இதனால் 90 மில்லி லிட்டர் மது விற்பனையை தொடங்க உள்ள நிலையில், அதனை கண்ணாடி பாட்டிலில் அல்லது பிளாஸ்டிக் பாட்டிலில் விற்பனை செய்யலாமா என்று பரிசீலித்து வருகின்றது. கடைசியில் பிளாஸ்டிக் பாட்டில் தான் சிறந்த முறை என்பது தெரியவந்தது. ஆனால் இந்த திட்டம் குறித்த பரிசீலனை ஆரம்ப கட்டத்தில் தான் இருப்பதாகவும், இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.

google news
Continue Reading

Trending