india
முதலிரவுக்கு நோ சொன்ன மனைவி… நீதிமன்ற படியேறிய கணவர்… ட்விஸ்ட் கொடுத்த நீதிபதிகள்
திருமணமான தம்பதிகளுக்குள் தாம்பத்தியம் முக்கியம். அது தவறும் பட்சத்தில் தான் பிரச்னை அதிகரிக்கும். அப்படி ஒரு மனைவி தாம்பத்தியத்துக்கு மறுக்க அவர்களுக்கு விவாகரத்து அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது.
உத்திரபிரதேசத்தினை சேர்ந்த இளைஞர் பெண் ஒருவரை 2013ம் ஆண்டு மே மாதம் 26ந் தேதி திருமணம் செய்து இருக்கிறார். திருமணம் முடிந்த மூன்று நாளில் தேர்வு எழுத இருப்பதாக கூறி தாயின் வீட்டுக்கு சென்று இருக்கிறார் அந்த பெண். ஆனால் தேர்வுகள் முடிந்தும் பெண் வீட்டுக்கு வரவில்லை.
கணவர் வீட்டினர் வந்து அழைத்தும் அப்பெண் வர மறுத்துவிட்டார். மேலும் கணவர் மீது சித்தி நகரின் காவல்நிலையத்தில் வரதட்சணை புகார் கொடுத்தார். இதனால் பெண்ணை விவகாரத்து செய்ய கணவர் முடிவெடுத்தார். இதனை தொடர்ந்து சாத்னா குடும்பநல நீதிமன்றத்தில் விவகாரத்து கோரி மனு கொடுத்தார்.
கணவர் தரப்பில் என் மனைவி மூன்று நாட்கள் மட்டுமே என்னுடன் இருந்தார். முதலிரவு அன்று குடும்பத்தினரின் கட்டாயத்தின் பேரில் தான் என்னை திருமணம் செய்ததாக கூறினார். அதனால் எங்களுக்குள் எந்த தாம்பத்தியமும் நடக்கவில்லை எனக் கூறப்பட்டது. மனைவி தரப்பில் தேர்வு இருப்பதால் தான் அம்மா வீட்டுக்கு போனேன். அதை பயன்படுத்தி வரதட்சணை கேட்கின்றனர்.
இதனால் நான் என் கணவருடன் அம்மா வீட்டில் வாழ விரும்புவதாக வாதிட்டனர். இதனையடுத்து கணவரின் வாதத்தினை ஏற்று அவருக்கு 2021ம் ஆண்டு விவகாரத்து கொடுக்கப்பட்டது. மனைவி தரப்பில் உத்திரபிரதேசத்தின் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இருந்தும் மனைவியின் தரப்பின் வாதம் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. தாம்பத்தியத்தினை மறுப்பதும் கொடுமை தான் எனக் கோரி விவகாரத்தினை உறுதி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.