Connect with us

india

அதானி, அம்பானியை ஏ1, ஏ2 எனக் குறிப்பிட்ட ராகுல் காந்தி.. நாடாளுமன்றத்தில் அமளி…

Published

on

ராகுல் காந்தி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மோடி தலைமையிலான பாஜக அரசு பிரபல பிசினஸ் தான் கௌதம் அதானி மற்றும் முகேஷ் அம்பானிக்கு சாதகமாக செயல்படுவதாக குற்றம் சாட்டினார். ஆனால் அவையில் சம்பந்தப்படாதவர்களின் பெயர்களை ராகுல் காந்தி பயன்படுத்துவது முறையில்லை என அவை தலைவர் ஓம் பிர்லா தெரிவித்திருக்கிறார்.

இதனால் ராகுல் காந்தி அவர்களை ஏ1 மற்றும் ஏ2 எனக் குறிப்பிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறார். அதானி மற்றும் அம்பானி இருவரும் இந்தியாவின் மொத்த பணத்தையும் தங்களுக்காக பயன்படுத்தி வருகின்றனர்.  அவர்கள் பெயர் இல்லாமல் பின்னர் அவர்களை எப்படி குறிப்பிட முடியும் என கேள்வி எழுப்பினார். இருந்தும் ஓம் பிர்லா அவரை தொடர்ந்து நிறுத்துமாறு கூறினார்.

இரண்டு தொழிலதிபர்கள் நாட்டையே தங்கள் வசம் வைத்துள்ளனர். அவர்கள் பெயரை என்னால் அவையில் எடுக்க முடியவில்லை என்றால் நான் அவர்களை ஏ1 மற்றும் ஏ2 என்று தான் குறிப்பிட வேண்டும். நான் அதானி மற்றும் அம்பானியை ஏ1 மற்றும் ஏ2 என்று அவையில் குறிப்பிடலாம் இல்லையா எனவும் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.

நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எழுந்த போது, ” கிரண் ரிஜிஜு ஏ1 மற்றும் ஏ2 ஐ பாதுகாக்கிறார், அவ்வாறு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் அதை செய்வார். அவருக்கு மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்துள்ளதாக ராகுல் கிண்டல் செய்தார்.

காங்கிரஸ் செயல்படுத்திய திட்டத்தை பாஜக தன்னுடைய சக்கரவியூகத்தால் தற்போது துவம்சம் செய்து வருகிறது. சக்கர வியூகத்தால் குருஷேத்திரப் போரில் அபிமன்யுவிற்கு என்ன நடந்ததோ தற்போது பாஜக அரசால் பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் சிறுகுறு  முதலாளிகளுக்கு அதுதான் நடந்து வருகிறது.

மேலும் பட்ஜெட்டில் ஓபிசி பிரிவினர் குறித்து எந்த திட்டமிடமும் இருக்கப்படவில்லை. பட்ஜெட்டின் அல்வா கிண்டும் நிகழ்வில் கூட அத்தகைய பிரிவினர் இடம்பெறவில்லை என்பதை புகைப்படத்தினை ஆதாரமாக வைத்து பேசினார். இது பாஜக உறுப்பினர்களிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி அவையில் அமளியை உண்டாக்கியது. ஓம் பிர்லாவும் இதுக்கு கண்டனம் தெரிவித்தார். இதை தொடர்ந்து ராகுல் தன்னுடைய உரையில் இருந்து அம்பானி மற்றும் அதானி பெயர்களை எடுத்துக்கொள்ள ஒப்புக்கொண்டார் எனவும் கூறப்படுகிறது.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *