latest news
மூதாட்டியை பாலியல் துன்புறுத்தல் செய்து கொலை செய்த வாலிபர்!.. விருதுநகரில் அதிர்ச்சி…
யாராக இருந்தாலும் சரி.. காம உணர்ச்சி மேலோங்கும் போது அங்கு குற்றங்கள் நிகழும். பாலியல் சீண்டல், பாலியல் வன்புணர்வாக மாறி கொலையிலும் முடியும் சாத்தியம் இருக்கிறது. இதுபோன்ற பாலியல் குற்றங்கள் எல்லா நாடுகளிலும் நிகழ்வதுண்டு. இது தொடர்பாக குற்றத்தில் ஈடுபட்ட பலர் இப்போதும் சிறையில் இருக்கிறார்கள்.
ஆனால், நாட்டில் பாலியல் குற்றங்கள் குறைந்தபாடில்லை. இந்நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் மூதாட்டியை வாலிபர் ஒருவர் பாலியல் துன்புறுத்தல் செய்து பின்னர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
விருதுநகர் அருகேயுள்ள வடமலாபுரம் கிராமத்தில் வசித்து வந்த மூதாட்டி ஒருவர் காலை வேளையில் இயற்கை உபாதையை கழிப்பதற்காக சென்றபோது அவரை பின் தொடர்ந்த காசிமாயன் என்ற வாலிபர் மூதாட்டியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி இருக்கிறார். அப்போது மூதாட்டி சத்தம் போட்டிருக்கிறார்.
சத்தம் கேட்டு யாராவது வந்தால் நாம் மாட்டிக்கொள்வோம் என பயந்த காசிமாயன் அருகில் இருந்த கயிற்றால் மூதாட்டியின் கழுத்தை இறுக்கி கொலை செய்திருக்கிறார். அதன்பின் அங்கிருந்து யாருக்கும் தெரியாமல் வீட்டுக்கு போய்விட்டார். இரவு வரை மூதாட்டி வீட்டிற்கு வராத காரணத்தில் அவரை அவரின் உறவினர்கள் தேடியபோது அருகிலிருந்த முள்காட்டில் சடலமாக கிடந்தார்.
போலீசாரின் விசாரணையில் காசி மாயனே இதை செய்தது தெரியவந்தது. இதையடுத்து காசிமாயன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.