கள்ளக்குறிச்சி விஷச்சாரயம் – 50ஐ தாண்டிய பலி என்ணிக்கை.. சோகத்தில் மக்கள்!…

கடந்த 2 நாட்களாகவே சமூகவலைத்தளங்களிலும், செய்தி ஊடகங்களிலும், தொலைக்காட்சிகளிலும் அதிகம் விவாதிக்கப்பட்டது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நிகழந்த விஷச்சாராய சம்பவம்தான். கர்ணாபுரம் எனும் பகுதியில் வசிக்கும் சிலர் கள்ளச்சாராயம் குடித்து உடல் நலம் பாதிக்கப்பட்டு அருகிலிருந்த மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

சிகிச்சை பலனின்றி சிலர் உயிரிழக்க இந்த செய்தி தமிழகமெங்கும் பரவியது. அப்படி இறந்து போன சிலரின் இறப்புக்கு போன சிலருக்கும் அங்கு கள்ளச்சாராயம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதை அருந்திய பலரும் வாந்தி, மயக்கம், வயிற்று வலியால் அவதிப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். மொத்தமாக 100க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.

எனவே, சிலரை திருவண்ணாமலை, சேலம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளுக்கும் அனுப்பி வைத்தனர். பலி எண்ணிக்கை அதிகரித்துகொண்டே போனதால் அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டது. நேற்று வரை 50 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. ஒரு பாக்கெட் மட்டும் சாராயம் குடித்த 50 பேரை மருத்துவர்கள் டயாலிசிஸ் செய்து காப்பாற்றிவிட்டனர்.

ஆனால், 2 பாக்கெட் குடித்தவர்கள் பலரும் இறந்து போனார்கள். 10 பேருக்கு பார்வை போய்விட்டது. இது தொடர்பாக 10க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்திருக்கிறார்கள். அவர்கள் அருந்திய சாராயத்தில் கலக்கப்பட்ட மெத்தனால் விஷமாக மாறியதும், கெட்டுப்போன மெத்தனாலை ஆந்திராவிலிருந்து வாங்கி இருக்கிறார்கள் என்பதும் தெரியவந்திருக்கிறது.

இந்நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 54ஆக உயர்ந்திருக்கிறது. இது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

Leave a Comment