குலவிளக்கு எரியப்போகுது… மாதாமாதம் காசு கொட்ட போகுது.. எடப்பாடி பழனிசாமி கொடுத்த அதிரடி வாக்குறுதி..

“அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கும் மாதம் 2,000 ரூபாய் வழங்கப்படும்” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக அறிவித்துள்ளார்.

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுகவின் முதற்கட்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ள அவர், பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், பொருளாதாரச் சமநிலையை உருவாக்கவும் இந்த ‘குலவிளக்குத் திட்டம்’ கொண்டு வரப்படும் என்று தெரிவித்துள்ளார்.

₹1000 இல்ல… ₹2000!
தற்போது தமிழக அரசு ‘மகளிர் உரிமைத் தொகை’ திட்டத்தின் கீழ் தகுதியுள்ள பெண்களுக்கு மட்டும் மாதம் 1,000 ரூபாய் வழங்கி வருகிறது. இதற்குப் போட்டியாக, அதிமுக தனது திட்டத்தில் தொகையை அப்படியே இரட்டிப்பாக்கி 2,000 ரூபாயாக அறிவித்துள்ளது.

இந்தத் திட்டத்தின் சிறப்பம்சங்கள்:
நிபந்தனைகள் இன்றி, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இந்த உதவித்தொகை வழங்கப்படும். குடும்பத் தலைவிகளின் வங்கி கணக்கிலேயே இந்த 2,000 ரூபாய் நேரடியாக வரவு வைக்கப்படும்.

ஆண்களுக்கும் வாய்ப்பு:
ஒருவேளை குடும்பத்தில் பெண்கள் இல்லையென்றால், அந்தப் பணம் குடும்பத் தலைவரான ஆணின் வங்கி கணக்கிற்குச் செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எடப்பாடியின் பலமான ‘ஸ்கெட்ச்’:
தேர்தலுக்கு இன்னும் சில காலமே உள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இந்த ‘குலவிளக்கு’ திட்டம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே 2021 தேர்தலின் போது 1,500 ரூபாய் தருவதாக அதிமுக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அதை 2,000 ஆக உயர்த்தியிருப்பது, இல்லத்தரசிகளை அப்படியே அதிமுக பக்கம் இழுப்பதற்கான ஒரு ‘மாஸ் மூவ்’ ஆகப் பார்க்கப்படுகிறது.

“எங்க ஆட்சி வந்தா உங்க பாக்கெட்ல காசு இருக்கும்” என்ற ரீதியில் எடப்பாடி பழனிசாமி கொடுத்திருக்கும் இந்த வாக்குறுதி, 2k கிட்ஸ் முதல் 90s கிட்ஸ் அம்மாக்கள் வரை அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

Leave a Comment