“தமிழ்நாடு அரசியலில் நிஜமான போட்டியே அதிமுக-வுக்கும் திமுக-வுக்கும் தான். இதில் மூணாவது பார்ட்டிக்கு வேலையே இல்லை” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார். 2026 தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK) குறித்து அவர் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மீடியா ஓவரா பில்டப் பண்ணுது!
செய்தியாளர்கள் தவெக-வின் தாக்கம் குறித்து கேள்வி எழுப்பியபோது, சற்றும் தயங்காமல் பதில் அளித்த ஈபிஎஸ், “மூன்றாவது ஒரு கட்சியை நீங்கள்தான் (ஊடகங்கள்) பெரிய ஆளாக்கிக்கொண்டு இருக்கிறீர்கள். அவர்கள் இன்னும் தேர்தலிலேயே போட்டியிடவில்லை. களம் கண்டால் தானே அவர்களுக்கு எத்தனை ஓட்டு விழும், மக்கள் செல்வாக்கு என்ன என்பது தெரியும்? கிரவுண்டுக்கே வராத ஒருத்தரை பத்தி இப்போவே ஏன் இவ்வளவு அலப்பறை?” என்று நக்கலாகக் கேள்வி எழுப்பினார்.
கூட்டணி கதவை சாத்திய அதிமுக?
கடந்த சில வாரங்களாகவே ‘அதிமுக – தவெக’ கூட்டணி அமைய வாய்ப்புள்ளதாகப் பேசப்பட்டு வந்தது. ஆனால், இன்றைய பேச்சின் மூலம் அந்த யூகங்களுக்கு எடப்பாடி பழனிசாமி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
ஸ்ட்ரைட் மெசேஜ்:
“போட்டி எங்களுக்குள் தான்” என்று அவர் சொன்னதன் மூலம், தவெக-வை ஒரு வலுவான சக்தியாகவோ அல்லது தங்களுக்கு இணையான ஒரு கூட்டணியாகவோ அதிமுக கருதவில்லை என்பது தெளிவாகியுள்ளது.
பிள்ளையார் சுழி:
2026 தேர்தலில் அதிமுக-தவெக கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை என்பதற்கு இதுதான் ‘பிள்ளையார் சுழி’ என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
“அதிமுக ஒரு பேரியக்கம். கடந்த 50 வருஷமா திமுக-வுக்கு சரிநிகர் போட்டியா இருக்கிறது நாங்க மட்டும்தான்” என்று கெத்து காட்டிய எடப்பாடியார், புதிய கட்சிகள் வருவதால் அதிமுக-வின் வாக்கு வங்கி ஒருபோதும் கரையாது என்பதை ஆணித்தரமாகப் பதிவு செய்துள்ளார்.
மொத்தத்தில், “விஜய் கட்சி இன்னும் களம் காணவில்லை, அதற்குள் அவர்களுக்கு ஓட்டு சதவீதம் பற்றிப் பேசுவது வீண்” என்று ஈபிஎஸ் கொடுத்த இந்த ‘நோஸ்கட்’, சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.