செங்கோட்டையன் தவெகவில் சேர்ந்து அவருக்கு அவரே பனிஷ்மென்ட் கொடுத்துக்கிட்டார்..

அரசியல் களத்தில் வயதில் மூத்த தலைவர் செங்கோட்டையனை, இளைய தலைமுறையான த.வெ.க. ஆதரவாளர்கள் ‘ப்ரோ’ என்றும், ‘கோட்டை ப்ரோ’ என்று தான் இனி அவர்கள் அழைக்க போகிறார்கள் என்று சாட்டை துரைமுருகனின் விமர்சனம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

17 vs 77: தலைமுறை இடைவெளியின் விசித்திரம் :
செங்கோட்டையனுக்கு 77 வயது என்றும், அவரை ‘ப்ரோ’ என்று அழைக்கும் த.வெ.க ஆதரவாளர்களுக்கு சராசரியாக 17 வயதே இருக்கும் என்றும் துரைமுருகன் சுட்டிக்காட்டியுள்ளார்.
“செங்கோட்டையன் ப்ரோ அப்படின்னு த.வெ.க ஆதரவாளர்கள் சொல்கிறார்கள். ஒருத்தன் கோட்டை-ப்ரோ அப்படின்னு சொல்றான். ஒருத்தன் செங்கோட்டையன் பெரியப்பு அப்படின்னு சொல்றான். த.வெ.க ஆதரவாளருக்கு 17 வயசு, அவருக்கு 77 வயசு. இந்த கேப்பை எப்படி நிரப்ப போறாங்கன்னு தெரியல.”

sattai durai murugan
sattai durai murugan

இவ்வளவு பெரிய தலைமுறை இடைவெளியைக் கடந்து, மூத்த அரசியல் தலைவரை ‘ப்ரோ’ என்று அழைப்பது மரியாதையாக எடுத்துக்கொள்வதா அல்லது ஏளனமாகப் பார்ப்பதா என்ற விவாதத்தை அவர் எழுப்பியுள்ளார்.

செங்கோட்டையனுக்கு இது பெரிய பனிஷ்மென்ட் :
இந்த ஒட்டுமொத்த நிகழ்வையும், மூத்த அரசியல்வாதி செங்கோட்டையனுக்கு ஏற்பட்ட ஒரு பெரிய தண்டனை (பனிஷ்மென்ட்) என்று சாட்டை துரைமுருகன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், “ஆனால் உண்மையில் செங்கோட்டையனுக்கு இது பெரிய பனிஷ்மென்ட்” என்று அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ளார். அரசியல் களத்தில் ஏற்படும் இதுபோன்ற விசித்திரமான தலைமுறை உறவுகள், மூத்த தலைவர்களுக்குத் தரப்படும் மரியாதையை எந்த அளவுக்குப் பாதிக்கிறது என்ற கேள்வியை சாட்டை துரைமுருகனின் இந்த விமர்சனம் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளது.

Leave a Comment