கல்லீரலையும் சிறுநீரகத்தையும் பாதுகாக்க சிம்பிள் வழி இதுதான்..

கல்லீரலையும்,சிறுநீரகத்தையும் நாம் எப்படி ஆரோக்கியமாக, அன்றாடம் கிடைக்கக்கூடிய எளிய பழங்களை பயன்படுத்தி பாதுகாக்கலாம் என்பதை பற்றி பார்க்கலாம் :

கல்லீரல், ரத்தத்தை சுத்திகரித்தல், கொழுப்பை செரிப்பது, வேதிப் பொருட்களை உருவாக்குதல் போன்ற வேலைகளை செய்கிறது.

சிறுநீரகம், என்பது உடலின் கழிவுகளை வடிகட்டி, ரத்தத்தை சுத்தப்படுத்தி, உடலின் நீர் மற்றும் உப்பு சமநிலையை சீராக்க உதவுகிறது. கழிவு நீக்கம், நீர் மற்றும் உப்பு சமநிலை, இரத்த அழுத்தம் சீராக்கம், சிவப்பணு உற்பத்தி
போன்ற வேலைகளை செய்கிறது.

நாவல் பழம் :
சீசன் சமயங்களில் சாலைகளில் விற்கப்படும் இந்த பழத்தை வாங்கி சாப்பிடும் பொழுது இதில் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளதால் நம்மளுடைய கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தை சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் வைக்கிறது.

மாதுளை பழம் :
இந்தப் பழத்தை ஊட்கொள்ளும் போது தோள்களுக்கு சிறந்த பாதுகாப்பாக இருக்கிறது. மேலும் சிறுநீரகத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை இது முழுமையாக அகற்றும்.‌

பப்பாளிப்பழம் :
லிவருக்கு நன்மை பயக்கக்கூடிய பல விஷயங்கள் இதில் அடங்கி உள்ளது. இதில் விட்டமின் சி உள்ளது, அதனால் இன்று பெரும்பாலானவர்களுக்கு வரும் ஃபேட்டி லிவர் பிரச்சனையை சரி செய்ய உதவும். மலச்சிக்கலை குணப்படுத்தும்.

சாத்துகுடி :
மனித உடலில் உள்ள ஏராளமான நச்சுக்களை இந்த பழத்தை நாம் சாப்பிடும் பொழுது முழுவதுமாக நீக்குகிறது.

தர்பூசணி :
தர்பூசணி பழத்தை சாப்பிடும் பொழுது எப்போதும் நம் உடம்பில் நீர்ச்சத்து நிறைந்து காணப்படும். சிறுநீரக செயல்பாடுக்கும் கல்லீரல்செயல்பாடுக்கும் இது ரொம்பவே நன்மை பயக்கும் என்று மருத்துவரின் ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment