சதி செஞ்சு ஒருத்தரைத் தடுக்கப் பாக்குறீங்களா? நீங்க போடுற ஒவ்வொரு முட்டுக்கட்டையும் விஜய்க்கு ஒரு Lift தான்! எவ்வளவுக்கு எவ்வளவு அமுக்குறீங்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு இந்த ‘சுனாமி’ உயரமா எழும்பும்! மறுதேர்தல்னு ஒண்ணு வந்தா… நீங்க செலவு பண்ண ‘பணம்’ இருக்காது, ஆனா எங்களுக்கு வாக்களிக்க மக்கள்கிட்ட ‘மனம்’ இருக்கும்! அப்போ தெரியும் இந்த 108ஓட வேகம் என்னன்னு!”

ஜனநாயக நாட்டில் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு நிலவும் சூழல், தமிழக அரசியலின் தற்போதைய அதிகாரப் போட்டியை துல்லியமாக படம் பிடித்துக் காட்டுகிறது. 108 இடங்களை பெற்றுத் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருக்கும் தமிழக வெற்றி கழகத்தை ஆட்சி அமைக்க அழைக்காமல் இழுத்தடிப்பது என்பது அரசியல் சாசன விதிகளுக்கு எதிரானது. ஒரு கட்சிக்கு முழுமையான மெஜாரிட்டி இல்லை என்றாலும், தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் போது அவர்களுக்கு முன்னுரிமை அளித்து ஆட்சி அமைக்க வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதுதான் நீண்டகாலமாக பின்பற்றப்படும் ஜனநாயக மரபு. ஆனால், இங்கே விஜய்யை தடுப்பதற்காக ஆளுநர் மாளிகை எடுத்து வரும் நடவடிக்கைகள் ஒரு மிகப்பெரிய அரசியல் சூழ்ச்சியின் அங்கமாகவே தெரிகிறது.

அரசியல் நோக்கர்களின் பார்வையில், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே விஜய்யின் வருகையை தங்களின் அரசியல் இருப்புக்கு வந்த ஆபத்தாகவே கருதுகின்றன. இதனால்தான் கொள்கை ரீதியாக எதிரெதிர் துருவங்களாக இருக்கும் இக்கட்சிகள், ஒரு புதிய சக்தி ஆட்சிக்கு வருவதைத் தடுக்க மறைமுகமாக ஆளுநர் மாளிகைக்கு பாஜகமூஉலம் அழுத்தம் கொடுப்பதாக தெரிகிறது. ஆனால், இத்தகைய முட்டுக்கட்டைகள் விஜய்யை பலவீனப்படுத்துவதற்கு பதிலாக, அவரை மக்கள் மத்தியில் ஒரு ‘பாதிக்கப்பட்ட தலைவராக’ மாற்றிவிடும். ஒரு தலைவரை மக்கள் அங்கீகரித்த பிறகு, அவரை அதிகாரத்தை பயன்படுத்தி முடக்க நினைப்பது அந்தத் தலைவருக்கான ஆதரவை இன்னும் பலமடங்கு அதிகரிக்கவே செய்யும் என்பதே வரலாறாக உள்ளது.

தற்போதைய சூழலில் நிலவும் மற்றொரு முக்கியமான அம்சம், மறுதேர்தல் குறித்த அச்சம். ஒருவேளை ஆளுநர் ஆட்சி அமைக்க விடாமல் தடுத்து, தமிழகம் மீண்டும் ஒரு தேர்தலை சந்திக்கும் சூழல் உருவானால், அது திராவிட கட்சிகளுக்கு சாவுமணியாக அமையும். தேர்தலுக்காக கோடிக்கணக்கில் வாரி இறைத்த வேட்பாளர்கள், மீண்டும் ஒருமுறை தேர்தல் என்று வரும்போது பொருளாதார ரீதியாக சோர்ந்து போவார்கள். ஆனால், தவெக தரப்போ மிக குறைந்த செலவில் மக்கள் ஆதரவுடன் களம் காண தயாராக உள்ளது. அத்தகைய சூழலில் மக்களின் கோபம் பழைய கட்சிகளுக்கு எதிராகத் திரும்பி, விஜய்யை முன்னெப்போதும் இல்லாத பெரும் பெரும்பான்மையுடன் அரியணையில் அமர்த்தும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

மேலும், ஆளுநர் மாளிகையின் தற்போதைய செயல்பாடுகள் மத்திய அரசின் விருப்பப்படியே நடப்பதாக தெரிகிறது. பாஜக எதிர்ப்பு முகத்தை கொண்ட கட்சிகளுடன் விஜய் கைகோர்க்க தயாராக இருப்பது டெல்லி மேலிடத்திற்கு பெரும் நெருக்கடியை கொடுத்துள்ளது. குறிப்பாக, காங்கிரஸ் கட்சியின் ஆதரவு விஜய்க்கு கிடைத்திருப்பது தேசிய அளவில் ஒரு மிகப்பெரிய மாற்றத்திற்கான தொடக்கமாக பார்க்கப்படுகிறது. இந்த அச்சுறுத்தலின் காரணமாகவே, விஜய்யை ஒரு முதலமைச்சராக பதவியேற்க விடாமல் தடுப்பதற்கான அனைத்து வழிகளையும் பாஜக மற்றும் அதன் நிழல் கட்சிகள் கையாண்டு வருகின்றன என்பது மிக தெளிவாகத் தெரிகிறது.

இறுதியாக, தமிழக அரசியல் களம் ஒரு எரிமலையின் உச்சியில் நிற்பதை இந்த நிகழ்வுகள் உறுதிப்படுத்துகின்றன. ஜனநாயக தீர்ப்பை எள்ளி நகையாடும் எத்தகைய செயலும் நீண்ட காலம் நிலைக்காது. 108 இடங்கள் என்பது வெறும் எண்ணிக்கை அல்ல, அது தமிழக மக்களின் ஒரு மாற்றத்திற்கான தாகம். அந்த தாகத்திற்கு முட்டுக்கட்டை போடுபவர்கள் வரும் காலங்களில் அரசியலில் இருந்தே அப்புறப்படுத்தப்படுவார்கள். விஜய்யை ஆட்சி அமைக்க அனுமதிப்பதே ஜனநாயகத்திற்கு அழகு; அதை விடுத்து சூழ்ச்சிகள் செய்தால், அது ஒரு மிகப்பெரிய அரசியல் புரட்சிக்கே தமிழகத்தில் வித்திடும்.

Leave a Comment