இந்திய அரசியல் வரலாற்றில் தேர்தல் வெற்றிகள் என்பவை பொதுவாகப் பலம் வாய்ந்த கூட்டணிகளைச் சார்ந்தே தீர்மானிக்கப்படுகின்றன. மத்தியில் ஆளும் நரேந்திர மோடியின் பாரதிய ஜனதா கட்சியாக இருக்கட்டும், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸாக இருக்கட்டும், கேரளாவில் பினராயி விஜயனின் கம்யூனிஸ்ட் கட்சியாக இருக்கட்டும் அல்லது தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலினின் திமுகவாக இருக்கட்டும், இவர்கள் அனைவருமே ஒரு மிகப்பெரிய கூட்டணிகளை அமைத்துத்தான் தங்களது வெற்றிகளைச் சாத்தியமாக்கினார்கள். ஆனால், இந்த வழக்கமான அரசியல் ஃபார்முலாவை மொத்தமாக உடைத்தெறிந்து, முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் எந்தவொரு கட்சியுடனும் கூட்டணி வைக்காமல், தன்னந்தனியாகக் களம் கண்டு மாபெரும் வெற்றி பெற்றது. அதுமட்டுமின்றி, தமிழக அரசியலில் பல தசாப்தங்களாக ஆதிக்கம் செலுத்தி வந்த திமுக, அதிமுக ஆகிய இரு ஜாம்பவான் கட்சிகளையும் வீழ்த்தி தவெக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருப்பது ஒரு வரலாற்றுச் சாதனையாகும்; இந்த அசாத்திய சாதனையை இனி இந்தியாவில் வேறெந்தக் கட்சியும் முறியடிக்க வாய்ப்பே இல்லை என்பதுதான் தற்போதைய எதார்த்தமான உண்மை.
இருப்பினும், தற்போதைய புதிய தவெக அரசுக்கு அடுத்ததாக ஒரு சிறிய சோதனை காத்திருக்கிறது, அதுதான் வரவிருக்கும் இடைத்தேர்தல் களம் ஆகும். தமிழ்நாட்டில் ஆறு அல்லது அதற்கு மேற்பட்ட தொகுதிகளில் இடைத்தேர்தல் வரும்போது, தற்போதைய திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட தோழமைக் கட்சிகள் எவையும் தங்களது வேட்பாளர்களை நிறுத்த வாய்ப்பில்லை என்றே அரசியல் வட்டாரங்கள் கணிக்கின்றன. ஒருவேளை, தற்போதைய அரசியல் சூழலில் திமுகவின் அழுத்தத்தை மீறி தவெக-வுக்கு எதிராக இந்தத் தோழமைக் கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தத் துணிந்தால், அவை திமுக கூட்டணியை விட்டு விரைவில் விலகப் போகின்றன என்றே அர்த்தம். அத்தகைய சூழல் ஏற்பட்டால், அந்தக் கட்சிகள் தானாக விளக்கிக் கொள்ளும் வரை கூட முதலமைச்சர் விஜய் பொறுத்திருக்க மாட்டார் என்றும், அவர்களை உடனடியாகக் கூட்டணியை விட்டு வெளியேற்றுவார் என்பதும் எதார்த்தமான உண்மையாகும்.
இந்த இடைத்தேர்தல் களத்தில் பிரதான எதிர்க்கட்சிகளில் ஒன்றான அதிமுக போட்டியில் இருந்து முழுமையாகப் பின்வாங்கி, தேர்தலைப் புறக்கணிக்கவே அதிக வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதே நேரத்தில் ஆளும் தவெக-வுக்கு எதிராகத் திமுக இந்தத் தேர்தலில் ஒரு மிகக் கடுமையானப் போட்டியை கொடுக்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே விஜய் மக்கள் செல்வாக்கோடு ஜெயித்து ஒரு முதலமைச்சராக அரியணையில் அமர்ந்திருப்பதை இன்னும் சகித்துக் கொள்ள முடியாத திமுக, எப்படியாவது இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது. விஜய்யின் அரசியல் இமேஜைக் காலி செய்ய வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தோடு, திமுக தனது ஒட்டுமொத்தப் படைகளையும், மந்திரி பிரதானிகளையும் தேர்தல் களத்தில் இறக்கத் தயாராகி வருகிறது.
திமுகவின் இந்த வியூகங்களை முறியடிக்க முதலமைச்சர் விஜய்யும் தனது பங்கிற்குப் புதிய கணக்குகளைப் போட்டுள்ளார். எத்தனை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்கிறதோ, அத்தனை தொகுதிகளுக்கும் அவரே நேரடியாகச் சென்று, களத்தில் இறங்கித் தீவிரப் பிரச்சாரங்களை மேற்கொண்டால் ஒட்டுமொத்தத் தேர்தல் முடிவுகளும் தவெக-வுக்குச் சாதகமாக மாறிவிடும் என்பதில் ஐயமில்லை. இந்த இடைத்தேர்தலிலும் விஜய் தனது செல்வாக்கை நிரூபித்து முழுமையாக வெற்றி பெற்றுவிட்டால், அடுத்த 20 முதல் 25 வருடங்களுக்குத் தமிழக அரசியலில் அவரை எவராலும் அசைக்க முடியாத ஒரு சகாப்தம் உருவாகிவிடும். இதனால் இந்த இடைத்தேர்தல் களம், தவெக-வின் எதிர்காலப் பயணத்தைத் தீர்மானிக்கும் ஒரு முக்கியத் திருப்புமுனையாக அமையப் போகிறது.
மறுபுறம், தற்போது அதிமுகவில் உள்ள பல முக்கிய மற்றும் பிரபலமான முகங்களை முதலமைச்சர் விஜய் தனது தவெக கட்சியில் சேர்த்துக் கொண்டு வருவதற்குப் பின்னால் ஒரு தீர்க்கமான அரசியல் மாஸ்டர் பிளான் ஒளிந்திருக்கிறது. சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெறுவது என்பது ஒட்டுமொத்த அலையைச் சார்ந்தது; ஆனால், உள்ளாட்சித் தேர்தலில் வெல்வது என்பது முற்றிலும் மாறுபட்ட ஒரு சவாலாகும். உள்ளாட்சித் தேர்தல்களைப் பொறுத்தவரை, அந்தந்தப் பகுதி மற்றும் வார்டுகளில் தனிப்பட்ட முறையில் மக்களிடம் பிரபலமாக இருப்பவர்கள் மட்டுமே எளிதில் வெற்றி பெற முடியும். இதைப் புரிந்து கொண்டதால்தான், அதிமுக அல்லது வேறு எந்தக் கட்சியாக இருந்தாலும், அடிமட்ட அளவில் மக்கள் மத்தியில் நல்ல செல்வாக்குடன் இருக்கும் பிரபலங்களை தவெக-வுக்குள் கொண்டு வரும் முடிவில் விஜய் தீவிரமாக இருக்கிறார்.
வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் தமிழ்நாட்டின் அனைத்து நகராட்சிகளையும், மாநகராட்சிகளையும் முழுமையாகக் கைப்பற்ற வேண்டும் என்ற இலக்கோடு தவெக காய்களை நகர்த்தி வருகிறது. அடிமட்ட அளவிலான உள்ளாட்சி அமைப்புகளையும் தவெக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டால், கிராமப்புறம் முதல் நகர்ப்புறம் வரை கட்சியின் கட்டமைப்பு அசைக்க முடியாத அளவுக்கு வலுப்பெற்றுவிடும். அவ்வாறு அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சிகளை விஜய் கைப்பற்றி சாதித்துக் காட்டிவிட்டால், அவர்தான் தமிழக அரசியலின் உண்மையான மாஸ் ‘கிங்’ என்பது அதிகாரப்பூர்வமாக நிரூபணமாகிவிடும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது.