தவெகவிற்க்கு ஒரு MLA உறுதி.. ஆனா விஜய் ஒரு தொகுதியில் கூட ஜெயிக்க மாட்டாரு..

தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வரும் நிலையில், மூத்த பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே, ஆதவ் அர்ஜுனாவின் கருத்துக்களையும், தவெக தலைவர் விஜய்யின் அரசியல் எதிர்காலத்தையும் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசிய ரங்கராஜ் பாண்டே, வரும் சட்டமன்றத் தேர்தல் குறித்தும், கட்சிகளின் தற்போதைய நிலைப்பாடு குறித்தும் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

“ஆதவ் அர்ஜுனா ஆரம்பத்தில் தவெக ஆளும் கட்சியாக மாறும் என்றும், அல்லது குறைந்தது எதிர்க்கட்சியாகவோ, இரண்டாவது பெரிய கட்சியாகவோ உருவெடுக்கும் என்றும் கூறி வந்தார். ஆனால், இன்று நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. எங்களுக்கு ‘ஒரு எம்.எல்.ஏ சீட்’ உறுதி ஆகிவிட்டது என்று ஆதவ் அர்ஜுனாவே சொல்லும் நிலைக்கு வந்திருக்கிறார்கள். அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் களத்தில் இறங்கிய பிறகு, இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளதாகத் தெரிகிறது,” என்று பாண்டே குறிப்பிட்டார்.

விஜய்யின் வெற்றி சந்தேகமே :
தொடர்ந்து நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) குறித்துப் பேசிய அவர், விஜய்யின் அரசியல் பயணம் எளிதாக இருக்காது என்றும் “தற்போதைய அரசியல் சூழலில், வரும் தேர்தலில் விஜய் வெற்றி பெறுவதே சந்தேகம்தான்,” என்று ரங்கராஜ் பாண்டே தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.
விஜய்யின் மாநாட்டிற்குப் பிறகு எழுந்த எதிர்பார்ப்புகளுக்கும், கள எதார்த்தத்திற்கும் இடையே பெரிய இடைவெளி இருப்பதாக பாண்டே கூறியுள்ளார்.

Leave a Comment