தமிழக வெற்றிக் கழகத்தில் நேற்றைய தினம் விஜய் முன்னிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இணைந்தார். தவெகவில் அனுபவம் இல்லாத கட்சி வழிநடத்த தெரியாத நபர்கள் இருந்த நிலையில் கட்சிக்கு வலு சேர்க்கும் விதமாக செங்கோட்டையன் வரவு இருப்பதாக தவெக ஆதரவாளர்கள் கூறி வந்தனர்.
இந்நிலையில் பிரபல சினிமா விமர்சகர் சவுக்கு சங்கர் தவெகவிற்கு செங்கோட்டையனின் வரவு பற்றி விமர்சித்துள்ளார். அதில்,” இப்பவும் தவெகவிற்க்கு பெரிய செல்வாக்கு ஒன்றுமில்லை. செங்கோட்டையனே விஜய் கிட்ட போய் சேர்ந்துட்டாருப்பா என்று சும்மா சொல்லிக்கொள்ளலாம். ஆனால் இது உண்மையில் எப்பொழுது சொல்லி இருக்க வேண்டுமென்றால் விஜய் விக்கிரவாண்டியில் நடத்திய முதல் மாநாட்டிற்கு பிறகு நடந்தால் அது வேறு”.

”ஆனால் இன்றைக்கு நீங்கள் எந்த செங்கோட்டையனை எடுத்திருக்கிறீர்கள் தெரியுமா?. அதிமுகவில் இருந்து எங்களுக்கு இனி இவர் தேவையில்லை என்று ரிஜெக்ட் செய்யப்பட்ட செங்கோட்டையனை தவெக கட்சியில் இணைத்துள்ளார்கள். அவர் வந்து சேர்ந்ததால் அது விஜய்க்கு பெரிய வெற்றி என்று சொல்ல முடியாது”.
”செங்கோட்டையனுக்கு வேற வழி இல்லை அதனால் இங்கு வந்து அடைக்கலம் கொண்டுள்ளார். வந்த உடனே அவரை மூன்று மாவட்டத்திற்கு பொதுச் செயலாளராக போட்டால் விஜய் ஜெய்த்து விடுவாரா? கோபிசெட்டிபாளையத்தில் அவர் ஜெயிப்பது இனி கஷ்டம். இனி அவரை தோற்கடிப்பதற்கு ஒற்றை காலில் நின்னு திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளும் வேலை பார்ப்பார்கள்”.
”செங்கோட்டையனுக்கு செல்வாக்கு இருந்தது என்றால் அவரை கட்சியை விட்டு நீக்கிய மறு நிமிடமே போராட்டம் செய்திருக்க வேண்டும். ஆனால் எதுவும் நடக்கவில்லை. ஏன் அவருடைய தொகுதியிலும் எந்த சத்தமும் இல்லாமல் அமைதியாக இருக்கிறது. இதிலிருந்து தெரிகிறது செங்கோட்டையன் எவ்வளவு செல்வாக்காக இருக்கிறார் என்று. இதை விஜய் புரிந்து கொள்ளாமல் தூக்கி வைத்துக்கொண்டார். இதுதான் விஷயம்”. என்று செங்கோட்டையன் வரவு குறித்து விமர்சனம் செய்துள்ளார் சவுக்கு சங்கர்.