விசில் சின்னத்துல ஓட்டு போட்டு பட்டனே உடைஞ்சு போச்சுன்னா… அந்த தளபதி மேல மக்கள் வச்சிருக்கிற வெறி எந்த அளவுக்கு இருக்கும்னு புரிஞ்சுக்கோ! நாமக்கல் முதல் கரூர் வரைக்கும் சதவீதம் எகிறி நிக்குது… இனி திராவிட அரசியலோட கோட்டையில புயல் வீசப்போகுது!

தமிழக அரசியல் வரலாற்றில் 2026 சட்டமன்ற தேர்தல் என்பது முன்னெப்போதும் இல்லாத ஒரு மாபெரும் மாற்றத்தை நோக்கிய பயணமாக தொடங்கியுள்ளது. குறிப்பாக, ஏப்ரல் 23-ஆம் தேதி நடந்து முடிந்த வாக்குப்பதிவில் தமிழகம் முழுவதும் பதிவாகியுள்ள சராசரி 85 சதவீதத்திற்கும் மேலான வாக்குப்பதிவு, அனைத்து அரசியல் கட்சிகளையும் அதிர வைத்துள்ளது. 2021 தேர்தலில் 72.81 சதவீதமாக இருந்த வாக்குப்பதிவு, இப்போது திடீரென 15 சதவீதம் வரை உயர்ந்துள்ளதற்கு ‘விஜய் ஃபேக்டர்’ மட்டுமே முக்கிய காரணம் என்று அரசியல் விமர்சகர் வெங்கடேஷ் உள்ளிட்டோர் சுட்டிக்காட்டுகின்றனர்.

233 தொகுதிகளில் தனது தமிழக வெற்றி கழக வேட்பாளர்களை நிறுத்தி, ஒரு அமைதியான புரட்சியை விஜய் நிகழ்த்தியிருப்பதாக கருதப்படுகிறது. தேர்தல் பிரச்சாரத்தின் போது அவர் சென்ற இடமெல்லாம் திரண்ட கூட்டம் வெறும் ரசிகர் கூட்டம் மட்டுமல்ல, அது ஒரு மாற்றத்தை விரும்பும் மக்களின் எழுச்சி என்பது இப்போது பதிவாகியுள்ள வாக்குகள் மூலம் உறுதியாகியுள்ளது.

இந்த தேர்தலில் மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய அம்சம், 18 முதல் 22 வயது வரையிலான புதிய வாக்காளர்கள் மற்றும் Gen Z தலைமுறையினரின் அபரிமிதமான பங்கேற்பு ஆகும். இதற்கு முன்பு தேர்தல்களில் ஆர்வம் காட்டாத இளைஞர்கள் கூட, இம்முறை அதிகாலை முதலே வரிசையில் நின்று தங்களது வாக்குகளை செலுத்தியுள்ளனர். பல குடும்பங்களில் தங்கள் பிள்ளைகளை ஓட்டுச்சாவடிக்கு வரவழைத்த சக்தியாக விஜய் பார்க்கப்படுகிறார்.

குறிப்பாக, தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றுபவர்கள் பெங்களூரு போன்ற வெளிமாநிலங்களில் இருந்து கார் மூலம் சென்னை வந்து வாக்களித்த சம்பவங்கள், ஒரு புதிய தலைவர் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றன. ஐடி ஊழியர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் நடத்தப்பட்ட ஆய்வுகளில், நூற்றில் 80 பேர் விஜய்க்கு ஆதரவாக வாக்களித்துள்ளதாகக் கூறுவது திராவிட கட்சிகளுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் மட்டுமல்லாமல், வெளிநாடுகளில் வாழும் தமிழர்களிடமும் இந்தத் தேர்தல் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளிலிருந்து லட்சக்கணக்கான தமிழர்கள் வெறும் ஓட்டு போடுவதற்காகவே விமானம் ஏறி தமிழகம் வந்துள்ளனர். சார்ட்டட் பிளைட்களை முன்பதிவு செய்து வந்தவர்கள் கூட, “பணம் எங்களுக்கு பெரிதல்ல, தமிழகத்தில் ஒரு புதிய அரசியல் மாற்றம் உருவாக வேண்டும், அதற்கு விஜய்யின் வருகை அவசியம்” என்று வெளிப்படையாகப் பேசியுள்ளனர்.

வெளிநாடுகளில் வசிப்பவர்கள் நேரடியாக வர முடியாவிட்டாலும், தமிழகத்தில் உள்ள தங்களது உறவினர்களுக்குப் போன் செய்து விஜய்க்கு வாக்களிக்குமாறு வலியுறுத்தியுள்ளனர். அமெரிக்கா போன்ற நாடுகளில் விஜய்க்கு ஆதரவாக கார் அணிவகுப்புகள் நடத்தப்பட்டது, ஒரு மாநில தேர்தலை உலகளாவிய பேசுபொருளாக மாற்றியுள்ளது.

மாவட்ட வாரியான வாக்குப்பதிவு புள்ளிவிவரங்களை பார்க்கும்போது, விஜய்யின் செல்வாக்கு எந்த அளவிற்கு ஆழமாக ஊடுருவியுள்ளது என்பது தெளிவாகிறது. குறிப்பாக நாமக்கல்லில் 9 சதவீதமும், ஈரோட்டில் 10 சதவீதமும், சேலத்தில் 8 சதவீதமும் வாக்குப்பதிவு கடந்த தேர்தலை விட அதிகரித்துள்ளது. கரூரில் பதிவாகியுள்ள 92.62 சதவீத வாக்குப்பதிவு என்பது ஒரு வரலாற்று சாதனையாக பார்க்கப்படுகிறது.

வழக்கமாக 70 சதவீதத்தை தாண்டினாலே நிம்மதி அடையும் அரசியல் கட்சிகள், இப்போது 85 முதல் 90 சதவீதம் வரை வாக்குகள் பதிவாகியிருப்பதை கண்டு கலக்கத்தில் உள்ளனர். இந்த கூடுதல் வாக்குகள் அனைத்தும் ஆளுங்கட்சிக்கு எதிரான அதிருப்தி வாக்குகளாகவும், விஜய்யின் வருகையால் உத்வேகம் பெற்ற புதிய வாக்குகளாகவும் இருப்பதால், பல தொகுதிகளில் விஜய் வெற்றி பெறுவது மட்டுமின்றி, ஒரு கிங் மேக்கராக அல்லாமல் ‘கிங்’ ஆக உருவெடுக்கும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.

தேர்தலுக்கு பிந்தைய நிலவரங்கள் குறித்து விஜய் தனது கட்சி நிர்வாகிகளுடன் நடத்திய ஆலோசனையில், தொண்டர்களின் அர்ப்பணிப்பு மிகுந்த பணி குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மற்ற கட்சிகள் பணம் கொடுத்து வாக்காளர்களை அழைத்தபோது, டிவிகே தொண்டர்கள் சொந்த கைக்காசை செலவு செய்து முதியவர்களையும் நோயாளிகளையும் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வந்து வாக்களிக்க உதவியுள்ளனர்.

பல இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் ‘விசில்’ சின்னத்தில் தொடர்ந்து அழுத்தியதால் அந்த பொத்தானே உடைந்த சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. பெண்களின் பேராதரவு மற்றும் அமைதியான முறையில் நடந்தேறிய இந்த அரசியல் புரட்சி, மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையின் போது வெளிப்படும். அன்று மதியத்திற்கு பிறகு தமிழக அரசியல் தலைவர்களின் பேச்சு முற்றிலும் வேறாக இருக்கும் என்றும், திராவிட அரசியலின் அஸ்திவாரம் ஆட்டம் காண்பது உறுதி என்றும் அரசியல் விமர்சகர்கள் ஆணித்தரமாக தெரிவிக்கின்றனர்.

Leave a Comment