ஈரோட்டில் மாபெரும் அரசியல் அரங்கேற்றம்.. டிச. 18-ல் விஜய்யின் முதல் பிரசாரம்..செங்கோட்டையன் தகவல்..

புதுச்சேரியில் நடைபெற்ற மக்கள் சந்திப்புக்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், வரும் டிசம்பர் 18-ஆம் தேதி ஈரோட்டில் தனது முதல் மாபெரும் அரசியல் பிரசாரத்தை தொடங்கவிருப்பதாக அக்கட்சியின் மேற்கு மண்டல பொறுப்பாளர் செங்கோட்டையன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

காலை 11 மணியில் இருந்து 1 மணி வரை இந்த முக்கிய நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

நேற்றைய தினம் நடைபெற்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 4 முக்கிய தீர்மானங்கள் குறித்து செங்கோட்டையன் வெளியிட்ட தகவல்:

“விஜய் தான் வரும் கால முதல்வர் என்பதை ஏற்றுக்கொண்டு, கட்சியில் இணைய வருபவர்களை வரவேற்போம்” என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அரசு அதிகாரிகளின் ஆலோசனைகளைக் கேட்டு, அனைத்து விதிமுறைகளுக்கும் உட்பட்டு நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

“த.வெ.க. அ.தி.மு.க.வாக மாறும் என்று நான் சொல்லவில்லை. நேற்று கூட்டத்தில் த.வெ.க.வில் பல பேர் இணையும் வாய்ப்பு இருக்கிறது என்று தான் சொன்னேன். கூட்டணியில் யாரை வைக்க வேண்டும் என்பதை தலைவர் (விஜய்) முடிவு செய்வார்” என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

ஈரோட்டில் நடைபெற உள்ள இந்த பிரசார நிகழ்வு, தமிழக அரசியல் களத்தில் அடுத்து வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான அச்சாரமாக பார்க்கப்படுகிறது.

Leave a Comment