எந்த கட்சியும் துணைக்கு வரலன்னு கேலி செஞ்சீங்க… ஆனா தமிழ்நாட்டோட ஒவ்வொரு வீடும் இன்னைக்கு தளபதிக்கு துணையா நிக்குது.. அசுர பலம் கொண்ட கட்சிகள், அதிகார வர்க்கம்னு எல்லாத்தையும் தவிடு பொடியாக்கி, 108 தொகுதிகளில் சிங்கமா நடந்து வர்றாரு தளபதி!

2026 தமிழகச் சட்டமன்ற தேர்தல் முடிவுகள், ஒரு தனிநபரின் அசைக்க முடியாத தன்னம்பிக்கைக்கும், மாற்றத்தை விரும்பிய பொதுமக்களின் பேராதரவிற்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாக வரலாற்றுப் பக்கங்களில் இடம்பெற்றுள்ளன. தமிழக அரசியலின் இரு பெரும் சக்திகளான திமுக மற்றும் அதிமுக ஆகிய கூட்டணிகள், தங்களுக்கு பின்னால் ஏராளமான கட்சிகளை திரட்டி ஒரு பிரம்மாண்டமான வியூகத்தை அமைத்திருந்தன. திமுக கூட்டணியில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளும், அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, அமமுக போன்ற முக்கிய அமைப்புகளும் ஓரணியில் நின்றன.

இத்தனை வலுவான கூட்டணி கட்டமைப்புகளையும், ஒட்டுமொத்தமாக சுமார் 39 கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் ஒற்றை ஆளாக எதிர்கொண்டார் நடிகர் விஜய். எவ்விதக் கூட்டணியும் இன்றி, தனது ‘தமிழக வெற்றிக் கழகம்’ மூலம் தனித்துப் போட்டியிட்டு அவர் ஈட்டியுள்ள இமாலய வெற்றி, தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தத்தை உதிக்க செய்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 108 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ள தவெக, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து அதிகார மையத்தை நோக்கி நகர்கிறது.

காலங்காலமாக திமுகவின் கோட்டையாக கருதப்பட்டு வந்த சென்னை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் தவெக அசுர பலத்துடன் ஊடுருவி, பாரம்பரிய வாக்கு வங்கிகளை புரட்டிப் போட்டுள்ளது. விஜய்க்கு ஆதரவு தெரிவிக்க எந்தவொரு அரசியல் கட்சியும் முன்வராத நிலையில், தமிழக மக்கள் ஒரு மாபெரும் சக்தியாக அவருக்கு பின்னால் திரண்டதே இந்த வரலாற்று மாற்றத்திற்குக் காரணமாக அமைந்தது. சீமான், சசிகலா, ராமதாஸ் எனப் பல முனைப் போட்டிகளையும், பல்வேறு அரசியல் சவால்களையும் தனது முதல் தேர்தலிலேயே முறியடித்து விஜய் சாதனை படைத்துள்ளார்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்குப் பிறகு, தனது தனிப்பட்ட செல்வாக்கின் மூலம் தமிழகத்தில் இத்தனை பெரிய அரசியல் திருப்பத்தை ஏற்படுத்திய ஒரே நட்சத்திரமாக விஜய் திகழ்கிறார். திமுக, அதிமுக மற்றும் பாஜக என மூன்று முனைகளில் இருந்தும் தொடுக்கப்பட்ட கடும் அரசியல் தாக்குதல்களைத் தகர்த்தெறிந்து அவர் மகுடம் சூடியுள்ளார். ஆளுங்கட்சியின் அதிகார பலம், அனுபவம் வாய்ந்த எதிர்க்கட்சிகளின் வியூகம் என அனைத்தையும் தவிடு பொடியாக்கி, “மாற்றம்” என்ற ஒற்றை இலக்கை நோக்கி மக்கள் அளித்த தீர்ப்பு விஜய்யை அரியணையில் ஏற்றியுள்ளது.

தவெக-வின் இந்த அபார வெற்றி, கடந்த 50 ஆண்டுகளாகத் தமிழகத்தை ஆக்கிரமித்திருந்த திராவிடக் கூட்டணிக் கலாச்சாரத்தை வேரோடு பிடுங்கி எறிந்துள்ளது. எவ்விதக் கட்சிகளின் துணையும் இன்றி, மக்களின் நேரடி ஆதரவை மட்டுமே மூலதனமாகக் கொண்டு களம் கண்ட விஜய்யின் துணிச்சலே இன்று அவரைத் தமிழகத்தின் தவிர்க்க முடியாத தலைவராக மாற்றியுள்ளது. 39 கட்சிகளின் ஒட்டுமொத்தப் பலத்தையும் ‘தனி ஒருவனாக’ நின்று வீழ்த்திய விஜய்யின் இந்த வெற்றி, இனிவரும் காலங்களில் மக்கள் செல்வாக்கு ஒன்றே நிரந்தரம் என்பதை உரக்கச் சொல்லியுள்ளது.

Leave a Comment