2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால், தமிழ்நாட்டு மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தி, அனைவருக்கும் வீடு மற்றும் மோட்டார் சைக்கிள் வாங்கும் நிலையை உருவாக்குவோம் என்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் தேர்தல் வாக்குறுதியை முன்னாள் அ.தி.மு.க. அமைச்சரும், மூத்த அரசியல்வாதியுமான பழ. கருப்பையா மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். விஜய்யின் கூற்று ‘அரசியல் அறிவே இல்லாத அபத்தமான வாக்குறுதி’ என்று அவர் சாடியுள்ளார். விஜய்யின் பொருளாதார மேம்பாட்டுத் திட்டம் நடைமுறைக்குச் சாத்தியமற்றது என்று பழ. கருப்பையா சுட்டிக்காட்டியுள்ளார்.
“2026 தேர்தலில் விஜய் வென்றால் தமிழ்நாட்டு மக்களுக்கு, தமிழ்நாடு பொருளாதாரத்தை மேம்படுத்தி, அனைவருக்கும் வீடு மற்றும் மோட்டார் சைக்கிள் வாங்கும் வகையில் செய்வார் என்று சொல்கிறார். இதை அமெரிக்க ஜனாதிபதியே செய்ய முடியாது. இவர் எங்கே செய்யப் போகிறார்?”
“ஐந்து ஆண்டுகளில் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி எல்லோரையும் கார் வாங்க வைத்து விடுவாரா? செல்வத்தை எப்படிப் பெருக்குவாய்? அதற்கு என்ன வழி இருக்கிறது? எப்படி மக்கள் அதை அடைவார்கள்?”
₹40 லட்சம் வீடு: எப்படி வணிகம் செய்ய வேண்டும் :
“தமிழ்நாட்டில் ஒரு சராசரி மனிதனின் ஒரு நாள் வருமானம் ₹300. அப்படி இருக்க சூழலில், விஜய் வந்த உடனே ஐந்து ஆண்டுகளில் ஒரு சராசரி மனிதனை எப்படி வீடு வாங்க வைப்பார், கார் வாங்க வைப்பார்? ஒரு வீடு வாங்க ₹40 லட்சம் என்றால், அதை வாங்குவதற்கு அவன் எத்தனை கோடிக்கு வணிகம் செய்ய வேண்டும்? அதெல்லாம் நடக்காது.”
இரவே குடித்துவிட்டு வீட்டுக்கு வருவான் :
₹300 சம்பளம் வாங்கும் ஒரு சராசரி மனிதன் அன்று இரவே அதைக் குடித்துவிட்டு வீட்டுக்கு வருவான். அதெல்லாம் நடக்கவே நடக்காது. அமெரிக்காவே செய்ய முடியாததை இந்தியாவில் இவர் வந்துதான் மேஜிக் செய்யனுமா ?
பொருளாதாரத்தில் உலகிலேயே பலம் வாய்ந்த நாடாகக் கருதப்படும் அமெரிக்காவாலேயே இத்தகைய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாதபோது, இந்தியாவில் விஜய் மட்டும் எப்படி ‘மேஜிக்’ செய்யப் போகிறார் என்றும் அவர் கிண்டலாகக் கேள்வி எழுப்பினார். “விஜய் அரசியல் அறிவே இல்லாமல் பேசுகிறார்.
மூத்த அரசியல்வாதியான பழ. கருப்பையாவின் இந்தக் கடும் விமர்சனம், தளபதி விஜய்யின் பொருளாதாரத் திட்டங்கள் குறித்த விவாதத்தை மேலும் கிளப்பியுள்ளது.