அரசியலுக்கு வருவதற்கு முன் விஜய் செய்த மிகப்பெரிய ஆய்வு.. விஜயகாந்த், ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர்களுக்கு ஏற்பட்ட இடைஞ்சல்கள், மிரட்டல்கள் என்னென்ன என்பதை ஆய்வு செய்தார்.. ரஜினிகாந்த் ஏன் பின்வாங்கினார், விஜயகாந்த் எந்த இடத்தில் சறுக்கினார், கமல்ஹாசனின் பிரச்சாரம் மக்களிடம் எடுபடாதது என்பதை முழுக்க ஆய்வு செய்துள்ளார். அந்த நிலைமை தனக்கு வரக்கூடாது என்பதற்காக பக்காவாக பிளான் போட்டார்.. நிச்சயம் அவரது மாஸ்டர் பிளான் ஜெயிக்கும்..

தமிழக அரசியலில் ஒரு திரை நட்சத்திரம் நுழையும்போது எழும் சவால்களையும், அவர்களுக்கு ஏற்படும் சரிவுகளையும் ஒரு பாடமாக எடுத்து கொண்டு, மிக நுணுக்கமான ஆய்வுக்கு பிறகே விஜய் தனது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன. அவரை மேலோட்டமாக பார்ப்பவர்கள் சினிமா புகழை வைத்து அரசியல் பிரவேசம் செய்தவர் என்று கருதலாம், ஆனால் அதன் பின்னணியில் ரஜினிகாந்த், விஜயகாந்த், கமல்ஹாசன் போன்ற ஜாம்பவான்கள் சந்தித்த அரசியல் சிக்கல்கள் குறித்த ஆழமான ‘மாஸ்டர் பிளான்’ ஒளிந்திருக்கிறது.

முதலாவதாக, நடிகர் ரஜினிகாந்த் ஏன் கடைசி நேரத்தில் பின்வாங்கினார் என்பதை விஜய் தீவிரமாக ஆய்வு செய்துள்ளார். ஒரு மாபெரும் பிம்பம் கட்டமைக்கப்பட்டும், சரியான நேரத்தில் முடிவெடுக்க தவறியது மற்றும் உடல்நலத்தை காரணம் காட்டி ஒதுங்கியது போன்ற விஷயங்கள் மக்கள் மத்தியில் ஏற்படுத்திய ஏமாற்றத்தை அவர் உணர்ந்துள்ளார். அதனால் தான், “வருவேன்.. வருவேன்..” என்று காலத்தை கடத்தாமல், சரியான வயதில், சரியான நேரத்தில், துல்லியமான அறிவிப்போடு அவர் களமிறங்கியுள்ளார்.

அடுத்ததாக, ‘கேப்டன்’ விஜயகாந்த் அவர்களின் அரசியல் எழுச்சியையும், அவர் எங்கே சறுக்கினார் என்பதையும் விஜய் கவனமாக ஆராய்ந்துள்ளார். விஜயகாந்த் ஆரம்பத்தில் பெற்ற மிகப்பெரிய வெற்றியை தக்கவைக்க தவறியதற்கு காரணம், முறையான இரண்டாம் கட்ட தலைவர்கள் செய்த துரோகங்கள், தனிப்பட்ட தாக்குதல்களுக்கு ஆளானதும், மீடியாவின் ட்ரோலும் தான். இதை தவிர்க்க, தனது கட்சியில் வலுவான கட்டமைப்பையும், தன்னை சுற்றி ஒரு பாதுகாப்பான, அதேசமயம் திறமையான ஆலோசகர் குழுவையும் விஜய் உருவாக்கி வருகிறார். குறிப்பாக, விஜயகாந்துக்கு ஏற்பட்ட மீடியா ட்ரோல் தனக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காக தேர்தலில் வெற்றி பெறும் வரை மீடியாவை சந்திப்பதில்லை என்ற முடிவை எடுத்தார். அதை இன்று வரை காப்பாற்றி வருகிறார்.

கமல்ஹாசனின் பிரச்சார பாணி ஏன் கிராமப்புற மக்களை சென்றடையவில்லை என்பது விஜய்யின் ஆய்வில் முக்கியமான ஒரு பகுதி. கமல் பேசிய உயர்தரமான அரசியல் மொழியும், கருத்தியலும் நகர தமிழ் மக்களிடம் மட்டுமே தாக்கத்தை ஏற்படுத்தியதை விஜய் கவனித்துள்ளார். அதனால் தான், தனது பேச்சிலும் செயல்பாட்டிலும் “மண்ணின் மணம்” மாறாமல், அடித்தட்டு மக்களுக்கும் புரியும் வகையிலான எளிமையான, அதேசமயம் ஆழமான கருத்துகளை அவர் முன்வைக்க திட்டமிட்டுள்ளார்.

முன்னோடிகளுக்கு ஏற்பட்ட மிரட்டல்கள், அதிகார வர்க்கத்தின் நெருக்கடிகள் ஆகியவற்றை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கு ஒரு ‘தற்காப்பு வியூகத்தை’ அவர் வகுத்துள்ளார். இதன் காரணமாகவே, அவர் எதிர்பார்த்த முட்டுக்கட்டைகளில் பாதிகூட தற்போது வரை அவருக்கு வரவில்லை. ரகசியமான வாராந்திர சர்வேக்கள், தொகுதி வாரியான கள நிலவரங்கள் என தரவுகளை அடிப்படையாக கொண்டு அவர் அரசியல் செய்வதால் அவரது ஒவ்வொரு நகர்வும் மற்றவர்களுக்கு புரியவில்லை. எதிர்ப்பாளர்களின் விமர்சனங்களை விட, தனது பிளானின் மீதான விஜய்யின் அபாரமான நம்பிக்கை தான் தமிழக வெற்றி கழகத்தின் மிகப்பெரிய பலமாக மாறியிருக்கிறது. இந்த தீர்க்கமான ஆய்வும், திட்டமிடலும் விஜய்யை ஒரு மாற்று சக்தியாக நிலைநிறுத்தும் என்பதில் ஐயமில்லை.

Leave a Comment