கொள்கை எதிரியுடன் கூட்டணி.? விஜய் நிலைப்பாட்டில் ஏற்பட்ட மாற்றம்.. விழுந்த அடி அப்படி..

விஜய் கட்சி தொடங்கியதில் இருந்து கடைசியாக கரூரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை வரை தவெகவின் தன்னுடைய கொள்கை எதிரி பாஜக என்று விமர்சித்து வந்தார். இவர்களை எதிர்த்து தான் என்னுடைய அரசியல் இருக்கப் போகிறது என்று போகும் இடமெல்லாம் கூறிக் கொண்டிருந்தார்.

அது மட்டும் இல்லாமல் எங்களுடைய அரசியல் எதிரி திமுக என்றும் அந்த கட்சியை கடுமையாக விமர்சனமும் செய்து வந்தார், தமிழ்நாட்டின் இரு பெரும் கட்சியாக பார்க்கப்படுவது திமுக மற்றும் அதிமுக தான். தன்னுடைய அரசியல் எதிரி திமுக தான் என்று விஜய் தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார். மறுபுறம் அதிமுகவை தாக்கி எந்த ஒரு விமர்சனமும் விஜய் செய்ததில்லை.

விக்கிரவாண்டில் நடைபெற்ற முதல் மாநில மாநாட்டில் விஜய் எங்களுடன் கூட்டணி வருபவர்களுக்கு ஆட்சியில் பங்கு மற்றும் முதலமைச்சர் பதவியும் வேண்டும் என்று சொன்னதால் அப்போது அதிமுக பின் வாங்கியது. அதேசமயம் அதிமுகவும் பாஜாகயுடன் கூட்டணி என்று அறிவிப்பை வெளியிட்டது.

அதன் பிறகு விஜய் அதிமுகவையும் விமர்சிக்க தொடங்கினார். விஜய்க்கு வரும் கூட்டத்தை பார்த்து இனிமேல் 234 தொகுதியிலும் நாம் தனித்தே நிற்கலாம் என்று முடிவெடுத்தார். தனது அரசியல் எதிரி திமுகவை வீழ்த்த வேண்டும் என்றால் முதலில் காங்கிரஸ் கட்சியை பிரிக்க வேண்டும் என நினைத்து ராகுல் காந்தியை தன் பக்கம் இழுக்க ஆதவ் அர்ஜுனாவை பேச்சுவார்த்தைக்கு அனுப்பினார்.

ஆனால் ராகுல் காந்தியோ முதலில் விஜய் தேர்தலை சந்தித்து வாக்குகளை பெறட்டும் அதன் பின் பார்த்துக் கொள்ளலாம் என்று அனுப்பி வைத்துவிட்டார். சமீபத்தில் நடைபெற்ற பீஹார் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. இதனால் விஜயும் தப்பித்தோம் பிழைத்தோம் என்று இருக்கிறார்.

இந்நிலையில் தவெக நிர்வாகிகளும் நாம் தனித்தே போட்டியிடலாம் என்று விஜயிடம் கூச்சலிட்டு வருகின்றனர். அப்படி தனித்து 234 தொகுதிகளிலும் போட்டியிட்டால் அதற்கான செலவை யார் ஏற்பது..? அப்படியே செலவு செய்து வேட்பாளர்களை நிறுத்தி போட்டியிட்டாலும் திராவிட கட்சிகள் அவர்களை விலை பேசி வாங்கி விடுவார்கள். இது போன்ற பல குழப்பங்களில் விஜய் இருந்து வருவதாக அரசியல் நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

கரூர் கூட்ட சம்பவம் விஜயை சிபிஐ இடம் சிக்க வைத்துள்ளது. இதனால் விஜய் அதிமுக பாஜக கூட்டணியில் இணைந்து விட்டால் தனக்கு அரசியல் பாதுகாப்பும் கிடைக்கும், அது மட்டும் இல்லாமல் ஆளும் திமுகவையும் வீழ்த்தி விடலாம். தனக்கு வெற்றியும் கிடைக்கும் என்ற நினைப்பில் இருக்கிறாராம்.

இது போன்ற கணக்குகளை எல்லாம் போட்டு, தற்போது விஜய் அதிமுகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்பட்டு வருகிறது. முதல் கட்ட பேச்சு வார்த்தை சற்று சுமூகமாக முடிந்துள்ளதாகவும் அதிமுக கட்சியினர் கலந்து ஆலோசித்து விரைவில் நல்ல முடிவை வெளியிடுவார்கள் என்று அரசியல் வட்டாரங்கள் இந்த தகவலை தெரிவிக்கிறது.

Leave a Comment