தமிழக அரசியல் வரலாற்றில் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக ஒரு புதிய விடியலை நோக்கி மக்கள் நகர்ந்துள்ளதை 2026 தேர்தல் முடிவுகள் உறுதிப்படுத்தியுள்ளன. எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா போன்ற ஆளுமைகளால் கட்டி எழுப்பப்பட்ட அதிமுக, தற்போது தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை பிடிக்க தவறியுள்ளது அக்கட்சியின் தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த காலங்களில் ஆட்சி அதிகாரத்தில் கோலோச்சிய அதிமுக, தற்போது தனது வாக்கு வங்கியை தக்கவைத்க் கொள்ளவே திணறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த இக்கட்டான சூழலில், அக்கட்சியின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஒரே வழியாக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அவர்களுக்கு ஆதரவு அளிப்பது மட்டுமே எஞ்சியுள்ளது.
அதிமுக தற்போது ஒரு முக்கியமான சந்திப்பில் நிற்கிறது. ஒன்று, தவெக-வின் புதிய மாற்றத்திற்கு ஆதரவு அளித்து ஒரு நிலையான ஆட்சியை தமிழகத்திற்கு வழங்குவது; அல்லது தனது பிடிவாதத்தால் மக்களிடம் இருந்து மேலும் அந்நியப்படுவது. மூத்த பத்திரிகையாளர் மணி போன்ற அரசியல் விமர்சகர்களின் கருத்துப்படி, தமிழகத்தின் அரசியல் களம் இனி “திமுக vs தவெக” என்ற நிலைக்கு மாறப்போகிறது. இந்ச் சூழலில் அதிமுக தனது இருப்பை தக்கவைத்து கொள்ள வேண்டுமென்றால், விஜய்யின் அசுர வேகத்திற்கு முட்டுக்கட்டை போடாமல் அவருக்கு தோள் கொடுப்பதே சரியான வியூகமாக இருக்கும். இது தவெக-விற்கு ஒரு வலுவான சட்டமன்ற பலத்தை கொடுப்பதுடன், தமிழகத்தில் ஒரு முற்போக்கான கூட்டணி ஆட்சி அமையவும் வழிவகுக்கும்.
மக்கள் தீர்ப்பு என்பது தவெக-விற்கு ஒரு மிகப்பெரிய அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. அதே சமயம், அதிமுகவை ஒரு விளிம்பு நிலைக்கு தள்ளியுள்ளது. தற்போதைய நிலையில் தமிழக சட்டமன்றத்தில் ஒரு நிலையான ஆட்சியை வழங்க தேவையான பெரும்பான்மைக்கு அதிமுகவின் ஆதரவு ஒரு கூடுதல் பலமாக இருக்கும். ஜாதி, மதங்களை கடந்த ஒரு சமத்துவ ஆட்சியை வழங்க போவதாக அறிவித்துள்ள விஜய்யுடன் அதிமுக கரங்கோர்த்தால், அது திராவிட கட்சிகளின் பாரம்பரிய வாக்குகளை தவெக-வின் புதிய சிந்தனைகளுடன் இணைக்கும் ஒரு பாலமாக அமையும். இது மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும், நிர்வாக சீர்திருத்தங்களுக்கும் ஒரு உத்வேகத்தை அளிக்கும்.
அதிமுகவின் தற்போதைய தலைமை இந்த யதார்த்தத்தை புரிந்து கொள்ள தவறினால், அதன் விளைவுகள் மிக கடுமையாக இருக்கும். ஒருவேளை தவெக அரசு கவிழ்ந்து, மீண்டும் ஒரு இடைத்தேர்தலோ அல்லது பொதுத்தேர்தலோ வரும் சூழல் ஏற்பட்டால், அது அதிமுகவை முற்றிலுமாக அழித்துவிடும். விஜய்யின் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கினால் அதிமுக ஒற்றை இலக்க இடங்களுக்கு தள்ளப்படும் அபாயம் அதிகம் உள்ளது. பல தொகுதிகளில் அதிமுக தனது டெபாசிட்டை இழந்துள்ள நிலையில், மீண்டும் தேர்தலை சந்திப்பது என்பது அக்கட்சியின் வரலாற்று முடிவிற்கு வழிவகுக்கும்.
முடிவாக, தமிழகத்தின் அரசியல் எதிர்காலம் என்பது தற்போது முதல்வர் விஜய் அவர்களின் கைகளில் உள்ளது. அதிமுக ஒரு ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகவோ அல்லது ஆதரவு அளிக்கும் ஒரு கூட்டணிக் கட்சியாகவோ உருவெடுத்தால் மட்டுமே அதனால் அடுத்த 25 ஆண்டுகளுக்கு தமிழக அரசியலில் நீடிக்க முடியும். “அரசியல் என்பது மக்களுக்கானது” என்ற விஜய்யின் தாரக மந்திரத்தை ஏற்று, அதிமுக தனது ஈகோவை கைவிட்டு ஆதரவுக் கரம் நீட்டுவதே காலத்தின் கட்டாயம். இந்த சமரசம் தமிழகத்திற்கு ஒரு நிலையான மற்றும் மாற்றத்திற்கான ஆட்சியை உறுதிப்படுத்தும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.