latest news
ஒருவர் பெயரில் 10 சிம் இருந்தால் 3 ஆண்டுகள் சிறையா? அமலாகும் புதிய சட்டம்..
டிஜிட்டல் மையமாக இந்தியா மாற தொடங்கிவிட்டது. பல தொலைத்தொடர்பு நிறுவனங்களும் இலவச சிம்கார்டுகளை வழங்கி வருகிறது. மொபைல் டேட்டாவை பயன்படுத்த நாமும் சிம்களை வாங்கி குவித்து விடுகிறோம். அந்த விஷயத்துக்கும் தற்போது மத்திய அரசு ஒரு எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.
இந்திய மக்கள் வாங்கி குவிக்கும் சிம்கார்டுகளால் குற்றச்செயல்கள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. அந்தவகையில், இனி ஒருவர் பெயரில் 9 சிம்கார்டுகள் மட்டுமே இருக்க வேண்டும். அதிலும், ஜம்மு, காஷ்மீர் போன்ற பதட்டமான இடங்களில் 6 சிம்கார்டுகளை மட்டுமே வைத்திருக்க முடியும்.
இந்த சட்டத்தை மீறி ஒருவர் தன்னுடைய பெயரில் 10 சிம் கார்டுகள் வைத்திருந்து முதல் முறை சிக்கினால் அவர்களுக்கு 50,000 அபராதமாக விதிக்கப்படும். அதை மீறியும் தொடர்ந்து இந்த குற்றத்தில் ஈடுபட்டால் அதிகபட்சமாக 2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என கூறப்படுகிறது.
அது மட்டுமல்லாமல் ஒருவருடைய ஆவணங்களை பயன்படுத்தி அவருக்கு தெரியாமல் அவர் பெயரில் சிம் கார்டு வாங்குவதும், தொலைத்தொடர்பை தடை செய்யும் கருவிகளை வைத்திருந்தாலோ, தடை செய்யப்பட்ட வயர்லெஸ் கருவிகளை வைத்திருந்தாலோ அவர்களுக்கு மூணு ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அதிகபட்சமாக 50 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.
அது மட்டுமல்லாமல், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் அனுமதி இன்றி அவர்களுக்கு வணிக செய்தியை அனுப்பினால் அவர்களுக்கும் 2 லட்சம் ரூபாய் அபராதத்துடன் சேவையை தடை பண்ணும் சட்டமும் அமலுக்கு வந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.