Connect with us

tech news

கூகுள் ஜெமினி AI பயன்படுத்துறீங்களா? இது உங்களுக்குத் தான்!

Published

on

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களும் ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயனர்களிடம் புகுத்தும் பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றனர். பயனர்களும் புதுப்புது ஏஐ சேவைகளை பயன்படுத்த மெல்ல துவங்கி வருகின்றனர்.

இந்த நிலையில், கூகுள் நிறுவனத்தின் ஜெமினி ஏஐ சேவை பயனர்களின் தனிப்பட்ட கூகுள் டிரைவ் தரவுகளை அவர்களது அனுமதி இன்றி வாசிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கூகுள் ஜெமினி ஏஐ பயன்படுத்திய நபர் ஒருவர் இந்த விவகாரத்தை வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளார்.

சில காலம் ஜெமினி ஏஐ பயன்படுத்தி வந்த நிலையில், ஏஐ சேவை தனது கூகுள் டிரைவ் ஃபைல்களை இயக்கி அதில் இருந்த விவரங்களை தொகுத்து, கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்ததாக அந்த பயனர் தெரிவித்துள்ளார். கூகுள் சேவை இவ்வாறு செய்ய உருவாக்கப்படவில்லை என்ற போதிலும், பயனர் விவரங்களை அவர்களின் அனுமதி இன்றி பயன்படுத்தியது தனியுரிமை பாதுகாப்பு விதிமீறல் ஆகும்.

இந்த விவகாரம் குறித்து பதில் அளித்த கூகுள் நிறுவனம், “எங்களின் ஜெனரேடிவ் ஏஐ அம்சங்கள் பயனர்கள் தங்களின் தரவுகளை கட்டுப்படுத்தும் விருப்பத்தை தரும். பயனர்கள் ஜெமினி சேவையை கூகுள் வொர்க்-ஸ்பேஸில் பயன்படுத்த அவர்கள் அதனை தனியாக செயல்படுத்த வேண்டியது அவசியம் ஆகும். இவ்வாறு அவர்கள் செய்யும் போது, அவர்களின் தரவைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்து அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு உதவும் வகையிலான பதில் உருவாக்கப்படும். மற்றப்படி அவர்களின் தரவுகள் எதுவும் அனுமதியின்றி ஸ்டோர் செய்து வைக்கப்படாது,” என்று தெரிவித்துள்ளது.

google news