நீட் தேர்வில் ஏன் இத்தனை டாப்பர்ஸ்… தேசிய தேர்வு முகமை சொல்வதென்ன?

0
49

நீட் தேர்வில் முறைகேடு வழக்குகள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்த நிலையில், தேசிய தேர்வு முகமை பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருக்கிறது.

நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகள் நடைபெற்றதாக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த வழக்குகளை விசாரித்த நீதிமன்றம், நீட் தேர்வு நடத்தப்படும் முறைகள் குறித்தும், வினாத்தாள்கள் அனுப்பப்படும் முறைகள் குறித்தும் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தது.

இந்த விவகாரத்தில் தேசிய தேர்வு முகமை உச்ச நீதிமன்றத்தில், பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருக்கிறது. அதில், `நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்வது தவறே இழைக்காத லட்சக்கணக்கான மாணவர்களுக்கு அநீதி இழைப்பது போன்றதாகும். பாட்னாவில் நடந்ததாகக் கூறப்படும் நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் வினாத்தாள் நகல்கள் தவறான வழிகளில் முறைகேடுகளுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இதுபோன்ற முறைகேடுகளால் பயனடைந்த மாணவர்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு.

நீட் வினாத்தாள் கசிவு என்பது தேசிய தேர்வு முகமை இயந்திரத்தின் ஒட்டுமொத்த குற்றம் அல்ல: அது ஒரு சிறிய சம்பவம்தான். 61 மாணவர்கள் 720/720 மதிப்பெண் பெற்றதற்கு பாடத்திட்டம் குறைக்கப்பட்டதுதான் மிக முக்கியமான காரணம். மத்திய அமைப்புகளின் விரிவான விசாரணைக்குப் பின்தான் ஒட்டுமொத்த அமைப்பும் தவறிழைத்துள்ளதா என்பது பற்றி கூற முடியும்.

2024 இளநிலை நீட் தேர்வு தொடர்பாக இதுவரை 63 புகார்கள் தேசிய தேர்வு முகமையில் பதிவு செய்யப்பட்டுள்ளன. நீட் முறைகேடு குறித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து மனுக்களையும் அபராதம் விதித்து தள்ளுபடி செய்ய வேண்டும்’’ என்று கூறப்பட்டிருக்கிறது.

google news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here